Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 5 பிப்ரவரி, 2021

மார்ச் முதல் வீட்டுக் கடன், வாகன கடன், பர்சனல் லோன்-கான வட்டி உயரும்.. உஷாரா இருங்க..!

 ரிசர்வ் வங்கி முடிவு

இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்த நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்க வேண்டும் என்ற திட்டத்துடன் மத்திய அரசு அறிவித்த வளர்ச்சி திட்டங்களுக்குச் சாதகமாக ரிசர்வ் வங்கி 2020ஆம் ஆண்டில் மட்டும் சுமார் கடனுக்கான வட்டி வட்டியை நிர்ணயம் செய்யும் ரெப்போ விகிதத்தில் சுமார் 1.15 சதவீதம் வரையில் குறைத்தது.

இதனால் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் அளிக்கும் வீட்டுக் கடன், வாகன கடன், பர்சனல் லோன்-கான வட்டி விகிதம் பெரிய அளவில் குறைந்தது. இந்நிலையில் தற்போது ரிசர்வ் வங்கி பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் ஒரு முக்கியமான மாற்றத்தைச் செய்ய முடிவு செய்துள்ளது.

இதனால் வருகிற மார்ச் மாத கடைசியில் அதாவது ரிசர்வ் வங்கியின் அடுத்த இருமாத நாணய கொள்கை கூட்டத்தில் இருந்து கடன்களுக்கான வட்டி விகிதம் உயரும் அபாயம் நிலவுகிறது. இதனால் வங்கியில் வைப்பு நிதிக்கான வட்டி விகிதமும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

ரிசர்வ் வங்கி முடிவு

ரிசர்வ் வங்கி விரைவில் வட்டி விகிதங்களை உயர்த்த முடிவு செய்ய உள்ளதாக இன்று நடந்து முடிந்த இருமாத நாணய கொள்கை கூட்டத்தில் தெளிவுப்படுத்தியுள்ளது. இந்தியாவில் தற்போதும் நிலவி வரும் மிகவும் குறைவான வட்டி விகித அளவீடுகள் வைப்பு நிதியை முக்கிய வருமானமாகக் கொண்டு இருக்கும் மூத்த குடிமக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

கடன் வாங்கியவர்கள்

இதேவேளையில் வீட்டுக் கடன், வாகன கடன், தனிநபர் கடன், கல்வி கடன் வாங்கிய பல கோடி மக்களுக்கு இந்தக் குறைந்த வட்டி விகிதம் சாதகமாக இருந்தாலும், மார்ச் மாதத்தில் இருந்து இக்கடன்களுக்கான வட்டி விகிதம் உயர அதிக வாய்ப்புகள் உள்ளது.

சிஆர்ஆர் விகிதம்

ரிசர்வ் வங்கி அடுத்த இருமாத நாணய கொள்கை கூட்டத்தில் ரெப்போ விகிதத்தைக் குறைக்காமல் சிஆர்ஆர் விகிதம் எனப்படும் Cash Reserve Ratio விகிதத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது. இன்று நடந்து முடிந்துள்ள நாணய கொள்கை கூட்டத்தில் எவ்விதமான வட்டி மாற்றங்களையும் செய்யாத நிலையில், மார்ச் 26ஆம் தேதி வரையில் கடன் வாங்கியவர்களுக்குப் பாதிப்பு இல்லை.

வங்கிகளின் முடிவு

சிஆர்ஆர் விகிதத்தை உயர்த்தும் போதும் வங்கிகளிடம் வர்த்தகத்திற்கான நிதி அளவு கணிசமாகக் குறையும். இதைச் சமாளிக்கக் கண்டிப்பாகக் கூடுதல் வருமானத்தைப் பெற வேண்டும் என இலக்குடன் வட்டி விகிதத்தை உயர்த்த முடிவு செய்யும். இதனால் கடன் மற்றும் வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் கணிசமாக உயர வாய்ப்புகள் உள்ளது.

4 சதவீத சிஆர்ஆர் விகிதம்

ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள படி அடுத்த 4 மாதத்தில் Cash Reserve Ratio எனப்படும் சிஆர்ஆர் விகிதத்தை 3 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டுள்ளது. இதன் படி மார்ச் 27, 2021ஆம் தேதி நடக்கும் நாணய கொள்கை கூட்டத்தில் 3 சதவீதத்தில் இருந்து 3.5 சதவீதமாகவும், மே 22, 2021ஆம் தேதி நடக்கும் நாணய கொள்கை கூட்டத்தில் சிஆர்ஆர் விகிதத்தை 3.5 சதவீதத்தில் இருந்து 4 சதவீதம் என இரு பகுதிகளாக வட்டி விகிதத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி

கொரோனா காலத்தில் நாட்டின் வளர்ச்சிக்கு ஏதுவான சூழ்நிலையை உருவாக்கித் தர வேண்டும் என ரிசர்வ் வங்கி ஜனவரி 2020ல் நடந்த நாணய கொள்கை கூட்டத்தில் பிப்ரவரி 2013ல் இருந்து ஜனவரி 2020 வரையில் 4 சதவீதமாக இருந்த சிஆர்ஆர் விகிதத்தை 3 சதவீதமாகக் குறைத்தது.

4 மாத காலம்

இந்நிலையில் தற்போது ரிசர்வ் வங்கி மீண்டும் சிஆர்ஆர் விகிதத்தைப் பழைய நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என முடிவு செய்துள்ளது, அடுத்த 4 மாதத்தில் இரு பகுதிகளாகச் சிஆர்ஆர் விகிதத்தை 3 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக உயர்த்த முடிவு செய்துள்ளது.

இந்த மாற்றத்தின் மூலம் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் வீட்டுக் கடன், வாகன கடன், தனிநபர் கடன், கல்விக் கடன் மற்றும் வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் உயர உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக