Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 5 பிப்ரவரி, 2021

26 லட்சம் ஏர்டெல் பயனர்களின் தகவல்கள் லீக்; பாகிஸ்தான் பார்த்த வேலை?

 


 

26 லட்சத்துக்கும் மேற்பட்ட ஏர்டெல் பயனர்களின் தகவல்கள் இணையத்தில் லீக் செய்யப்பட்டதின் பின்புலத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஹேக்கர்கள் உள்ளதாக ஒரு சைபர் செக்யூரிட்டி ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் பிராந்தியத்தைச் சேர்ந்த 26 லட்சத்துக்கும் மேற்பட்ட ஏர்டெல் பயனர்களின் டேட்டா-லீக் நிகழ்வு, பாகிஸ்தானைச் சேர்ந்த "அரசால் வழங்கப்பட்ட" ஹேக்கர்களால் திட்டமிடப்பட்டுள்ளதாக சுயாதீன சைபர் செக்யூரிட்டி ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஹேக்கர்கள் லீக் செய்யப்பட்ட டேட்டாக்களை இணையத்தில் "வைக்க" புதிய அக்கவுண்ட்களை உருவாக்கி, அவற்றை 3,500 பிட்காயின்களுக்கு (இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.2.5 லட்சம்) விற்க முயன்றனர்.

இதற்கு பின்புலமாக செயல்பட்ட, பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஹேக்கர் குழுவை டெல்லி போலீஸ் சைபர் செல் அடையாளம் கண்டுள்ள நிலையில், இதே குழு தான் கடந்த 2018 ஆம் ஆண்டில் இது இந்திய அரசாங்க வலைத்தளத்தை ஹேக் செய்து செயலிழக்கச் செய்தது என்பதையும் உறுதி செய்துள்ளது.


இந்த ஹேக்கர் குழு ‘டீம்லீட்ஸ்’ என அடையாளம் காணப்பட்டது, இது நாட்டின் முதன்மையான உளவு நிறுவனமான பாக்கிஸ்தானின் ஐ.எஸ்.ஐ (இன்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸ்) உத்தரவின் பேரில் செயல்படுவதாகவும் கூறப்படுகிறது.



"பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஹேக்கிங் குழுவான டீம்லீட்ஸ், ஏர்டெல் டேட்டா கசிவுக்குப் பின்னால் உள்ளது" என்று சுயாதீன சைபர் செக்யூரிட்டி ஆராய்ச்சியாளர் ராஜ்ஷேகர் ராஜாஹாரியா (தொடர்பு கொண்டபோது) ஐஏஎன்எஸ்ஸிடம் தெரிவித்துள்ளார்.

ஹேக்கர்கள் ஆரம்பத்தில் இணையத்தில் ஒரு டொமைன் வழியாக டேட்டாவை லீக் செய்தனர். மலும் ‘ரெட் ராபிட் டிம்ஸ்’ என்ற புனைப்பெயரை கொண்ட புதிய ட்விட்டர் அக்கவுண்ட் வழியாக மேலும் பல டேட்டாக்களை லீக் செய்வதாகவும் அச்சுறுத்தினர்.

எவ்வாறாயினும் இது "அசாதாரண செயல்பாடு" என்று கூறி குறிப்பிட்ட அக்கவுண்ட்டை ட்விட்டர தடைசெய்தது.

தடைக்குப் பிறகு, ஹேக்கர்கள் (டீம்லீட்ஸ்) என்கிற மற்றொரு ட்விட்டர் அக்கவுண்ட்டை '‘PANAMA-iii’ என்ற பெயரில் உருவாக்கியது, இது புதிய இணைப்புகளை ட்வீட் செய்தது, அது 26 லட்சம் பயனர்களின் ஒரிஜினல் டேட்டா வழியிலான சப்செட் டேட்டாவிற்கு வழிவகுத்தது.

அந்த டேட்டாக்களில் சில இந்திய இராணுவத்தைச் சேர்ந்த பயனர்களுக்கு சொந்தமானதாக இருக்கக்கூடும் என்று வெளியான அறிக்கை தெரிவிக்கிறது. பின்னர் ‘பனாமா- iii’ அக்கவுண்ட்டும் நீக்கப்பட்டது.


இதெல்லாம் ஒருபக்கம் இருக்க எந்த வகையான டேட்டாக்களும் லீக் ஆகவில்லை என்ற தனது நிலைப்பாட்டை ஏர்டெல் இன்னும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. ஏர்டெல் செய்தித் தொடர்பாளர் ஒருவர், "இந்த (ஹேக்கிங்) குழுவால் கூறப்பட்டபடி எந்த ஏர்டெல் அமைப்பின் மீதும் எந்த ஹேகிங்கோ அல்லது மீறலோ நடக்கவில்லை" என்று கூறியுள்ளார்

"இந்த குழு இப்போது 15 மாதங்களுக்கும் மேலாக எங்கள் பாதுகாப்புக் குழுவுடன் "தொடர்பில்" உள்ளது, மேலும் ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்திலிருந்து தவறான டேட்டாவை வெளியிடுவவதையும், அதற்கு உரிமை கூறுவதையும் செய்து வருகிறது" என்று ஒரு செய்தித் தொடர்பாளர் ஐஏஎன்எஸ்ஸிடம் தெரிவித்துள்ளார்.

"டீம்லீட்ஸ் இந்த டேட்டா லீக்கை முன்னெடுக்க இரண்டு ட்விட்டர் அக்கவுண்ட்களை உருவாக்கியது. ரெட் ராபிட் டீம்ஸ் மற்றும் டீம்லீட்ஸ். இவைகள் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களாக இருக்கலாம் அல்லது ஒன்றாக வேலை செய்யலாம்” என்றும் ராஜஹாரியா தெரிவித்துள்ளார்.

ஹேக்கர்கள் தரவை விற்க விரும்பினர், ஆனால் வெற்றிபெற முடியவில்லை என்றும் வெளியான அறிக்கை கூறுகிறது. அதாவது அவர்கள் டேட்டாவை இணையத்தில் "கொட்டினர்" ஆனால் விற்க முடியவில்லை. இதில் குழப்பமான விஷயம் என்னவென்றால், டேட்டாக்கள் பொது இணையதளங்களில் கொட்டப்பட்டது, டார்க் வெப்பில் அல்ல.

,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக