Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 2 பிப்ரவரி, 2021

'சினிமா பிளஸ்' மூலம் வெறும் ரூ.129 செலவில் ஒட்டுமொத்த OTT சேவைகளை வழங்கும் BSNL..

யூப்டிவி ஸ்கோப் என்டர்டெயின்மென்ட்

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) நாட்டில் வயர்டு பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களைத் தீவிரமாக இழந்து வருகிறது. அதே நேரத்தில், அரசாங்கத்தின் தலைமையிலான டெல்கோவின் வயர்லெஸ் சந்தாதாரர் தளம் பாரதி ஏர்டெல் போன்ற விரைவான வேகத்தில் வளரவில்லை என்பதும் உண்மையே. சந்தாதாரர்களை ஈர்க்க, பிஎஸ்என்எல் ஒரு புதிய 'சினிமா பிளஸ்' சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

சினிமா பிளஸ் சேவை

சினிமா பிளஸ் சேவை OTT சந்தாக்களை ஒரே தொகுப்பில் தொகுக்கிறது. சில வாரங்களுக்கு முன்பு, OTT ஆட்-ஆன் பேக்கள் போன்ற திட்டத்தை BSNL வெளியிடும் என்று கூறியிருந்தோம், இப்போது, ​​பிஎஸ்என்எல் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் பயனர்களுக்கான இந்த கூடுதல் நன்மைகள் ''சினிமா பிளஸ்' தொகுப்பின் மூலம் கிடைக்கும்.

யூப்டிவி ஸ்கோப் என்டர்டெயின்மென்ட்

பி.எஸ்.என்.எல் சினிமா பிளஸ் என்பது அடிப்படையில் மறுவடிவமைக்கப்பட்ட 'யூப்டிவி ஸ்கோப் என்டர்டெயின்மென்ட்' (YuppTV) சேவையாகும், இது யூப் டிவிக்கு முற்றிலும் சொந்தமானது. ​​தற்போதுள்ள பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் பயனர்களுக்கு சினிமா பிளஸ் பேக் மட்டுமே மாதத்திற்கு ரூ. 129 விலையில் கிடைக்கிறது. பிஎஸ்என்எல் சினிமா பிளஸ் என்டர்டெயின்மென்ட் பேக்கின் கீழ் கிடைக்கும் நன்மைகளை விரிவாகப் பார்க்கலாம்.

ரூ.129 சினிமா பிளஸ் நன்மைகள்

பிஎஸ்என்எல் சினிமா பிளஸ் எண்டர்டெய்ண்மெண்ட் என்ற பெயரில் ஒரே ஒரு பேக்காக தற்போது கிடைக்கிறது. இந்த திட்டம் யூப்டிவி ஸ்கோப் என்டர்டெயின்மென்ட் பேக் என்றும் கிடைத்தது. இதன் விலை இப்போது ரூ.129 ஆக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது YuppTV, ZEE5, SonyLIV மற்றும் Voot ஆகிய நான்கு OTT சந்தாக்களைத் தொகுக்கிறது. யூப்டிவி ஸ்கோப் / பிஎஸ்என்எல் சினிமா பிளஸ் என்பது ஒரே இடத்தில் OTT சந்தாக்களைத் தொகுக்கும் ஒரு இடமாகும்.

எண்ணில் அடங்காத நன்மை

இத்திட்டத்தின் விலை ரூ. 199 ஆகும். ஆனால், பயனர்கள் இதை விளம்பர சலுகையின் ஒரு சலுகையாக வெறும் ரூ. 129-க்கு வாங்க முடியும். YuppTV ஸ்கோப் என்டர்டெயின்மென்ட் பேக் வழங்கும் OTT சந்தா 100-க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்களுடன் YuppTV சந்தாவையும், 80-க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்கள், 500+ தொலைக்காட்சி தொடர்கள், அசல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு திரைப்படங்களில் 2000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுடன் ZEE5 சந்தாவையும் வழங்குகிறது.

இந்த வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே

சோனிலிவ் சந்தா 15+ லைவ் டிவி சேனல்கள் மற்றும் 200+ திரைப்படங்களுடன் தொகுக்கப்பட்டுள்ளது. கடைசியாக, பயனர்கள் கூடுதல் செலவு எதுவும் இல்லாமல் வூட் (Voot) சந்தாவைப் பெறுகிறார்கள், இது வாடிக்கையாளர்களுக்கு 35 சேனல்களை லைவ் டிவியைப் பார்க்க அனுமதிக்கிறது, மேலும் இது 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதுள்ள பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த சேவை கிடைக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக