மொபைல் ஆப்கள் மூலம் ஆன்லைன் முறையில் கடன் வழங்கி, கடன் வாங்கிய பிறகு அவர்களை மிரட்டி பணம் வசூலிப்பதாக ஆர்பிஐ-ல் புகார்கள் குவிந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆன்லைன் செயலிகள் மூலம் ஆதார் கார்ட், பான்கார்ட் உள்ளிட்ட தகவலை முறையாக பதிவிட்டு வங்கி கணக்கில் கடன் தொகை பெறும் விவரங்களை அறிந்திருப்போம். இதுபோன்ற செயலிகள் மூலமாக பொதுமக்களின் ஆதார் கார்ட், பான் கார்ட் விவரங்களை கடன் செயலிகள் பெற்றுக் கொள்வதாகவும் இதன்மூலம் தேச பாதுகாப்புக்கு ஆபத்து விளைவிக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்து வருகின்றன. இதுபோன்ற செயலிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன.
அங்கீகரிக்கப்படாத ஆன்லைன் கடன் செயலிகள்
ஆர்பிஐ அங்கீகரிக்கப்படாத ஆன்லைன் கடன் செயலிகளிடம் இருந்து கடன் வாங்குவதை மக்கள் தவிர்க்கும்படியும், எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் எனவும் முன்னதாகவே அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. அதேசமயத்தில் 100-க்கும் மேற்பட்ட முறைகேடான ஆன்லைன் கடன் செயலிகள் மத்திய அரசின் உத்தரவின்பேரில் நீக்கப்பட்டுள்ளது.
1500 டிஜிட்டல் கடன் செயலிகள் மீது புகார்
என்பிஎஃப்சியில் பதிவு செய்யப்பட்ட 490 கடன் செயலிகள் உட்பட 1500 டிஜிட்டல் கடன் செயலிகளுக்கு எதிராக ரிசர்வ் வங்கியில் தொடர்ந்து புகார்கள் குவிந்து வருகின்றன. 1509 டிஜிட்டல் கடன் செயலிகளுக்கு எதிராக ஆர்பிஐ-ல் புகார் வந்துள்ளதாகவும் இதில் என்பிஎஃப்சியில் பதிவு செய்யப்பட்ட 490 கடன் செயலிகள் அடங்கும் எனவும் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.
ஆய்வு செய்வதற்கு பணிக்குழு
கடன் செயலிகள் மீது வழங்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் ஒழுங்கு படுத்தப்படாத கடன் வழங்கும் நிறுவனங்களை ஆய்வு செய்வதற்கு பணிக்குழு அமைக்கப்பட உள்ளதாகவும் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.
ஒழுங்குப்படுத்தப்படாத கடன் வழங்கும் நிறுவனங்கள்
ஆன்லைன் கடன் வழங்குவது தொடர்பாக அனைத்து அம்சங்களையும், ஒழுங்குப்படுத்தப்படாத கடன் வழங்கும் நிறுவனங்களையும் ஆய்வு செய்ய பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் கடன் வழங்குவது குறித்தும் துன்புறத்தல் சம்பவங்கள் குறித்தும் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது எனவும் இந்த குழு முறையான ஒழுங்குமுறை அணுகுமுறையை கொண்டு வரும் எனவும் மத்திய இணை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக