கொரோனா தொற்று பரவலை தடுக்க நாடு முழுவதும் தொடர்ந்து தளர்வுகளோடு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் வீட்டிலேயே தங்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலானோர் தங்களது நேரத்தை டிவியிலும், மொபைல்போனிலும் செலவிட்டனர்.
பிரதானமாக இருந்த பப்ஜி விளையாட்டு
ஸ்மார்ட்போன்களில் PUBG விளையாட்டு பிரதானமாக இருந்தது. பப்ஜி விளையாடுவதில் ஏணையோர் தங்களது நேரத்தை செலவிட்டனர். பப்ஜி விளையாட்டில் பலரும் தங்களை அடிமைப்படுத்தி கொண்டார்கள். இதையடுத்து அந்த விளையாட்டு தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பினராலும் முன் வைக்கப்பட்டது. இதில் நேரத்தை செலவிட்டு வந்த சிலர் மாரடைப்பு ஏற்பட்டு உயரிழந்த சம்பவங்களும் அரங்கேறியுள்ளது.
பப்ஜியை தடை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் குறிப்பாக பெற்றோர்கள் கோரிக்கைகளை முன்னிருத்தி வந்தனர். இந்த நிலையில்தான், பப்ஜி விளையாட்டுக்கு இந்தியாவில் தடை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. பப்ஜி தடையால் ஏணையோர் மன உளைச்சலுக்கு ஆளாகினர்.
ஃப்ரீ ஃபயர் கேம்
இதையடுத்து ஃப்ரீ ஃபயர் என்ற இந்த கேம் சமீப காலமாக பிரபலமடைந்து வருகிறது. இதுவும் PUBG கேமிற்கான ஒரு நல்ல மாற்றாகும். பப்ஜி போல் நீண்ட நேரம் இல்லாமல், குறுகிய நேரத்தில் பப்ஜி கேம் போன்ற அனுபவத்தை அனுபவம் இதில் கிடைக்கும். இந்த கேமில் ஒவ்வொரு சுற்றும் வெறும் 10 நிமிடம் மட்டுமே இருக்கும். பப்ஜிக்கு அடுத்தப்படியாக ஃப்ரீ பயர் கேம் பிரபலமடைந்து வருகிறது.
ஆன்லைன் வகுப்புகளுக்கு ஸ்மார்ட்போன்கள்
கொரோனா பூட்டுதல் காரணமாக பள்ளிகள் படிப்படியாகவே திறந்து வருவதால் ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக பெற்றோர்கள் மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன்களை வாங்கிக் கொடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில் ஃப்ரீ பயர் விளையாட்டு காரணமாக மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியை சேர்ந்தவர் பாபு என்பவரின் மகன் ராகேஷ். இவர் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகிக் கொண்டிருக்கும் நபர்கள்
ராகேஷுக்கு அவரது பெற்றோர்கள் ஆன்லைன் வகுப்புக்காக ஸ்மார்ட்போன் வாங்கிக் கொடுத்துள்ளனர். மாணவர் ஸ்மார்ட்போனில் ஆன்லைன் ஃப்ரீ பயர் கேம் விளையாடத் தொடங்கியுள்ளார். ஆன்லைன் விளையாட்டுக்கு சில பெரியவர்களை அடிமையாகக் கொண்டிருக்கின்றனர். இதில் 8 ஆம் வகுப்பு மாணவர் குறித்து சொல்லவா வேண்டும்.
ஃப்ரீபயரில் அதிக புள்ளிகள் எடுக்க முடியவில்லை
இவரும் ஒரு கட்டத்ததில் ஃப்ரீபயர் கேமிற்கு அடிமையாகியுள்ளார் என கூறப்படுகிறது. விளையாட்டில் அதிக புள்ளிகள் எடுக்க முடியவில்லை என்ற மனநிலை தொடர்ந்து ராகேஷ் இடம் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டுப்பாடம் எழுதச் சென்ற ராகேஷ் நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு திரும்பவில்லை, இதையடுத்து பெற்றோர் மாடிக்கு சென்று பார்த்தப்போது மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் இருந்துள்ளார்.
தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவர்
மகன் உயிரிழந்ததை கண்ட பெற்றோர் நீண்ட வேதனைக்கு உள்ளாகினர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்தனர். இதுகுறித்த விசாரணையில் ஃப்ரீ பயர் விளையாட்டால் மன உளைச்சலுக்கு உள்ளான மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக