Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 9 பிப்ரவரி, 2021

விவசாயம் 2.0: மண் வேண்டாம், நிலம் வேண்டாம், காற்றில் விளையும் உருளைக்கிழங்கு

 விவசாயம் 2.0: மண் வேண்டாம், நிலம் வேண்டாம், காற்றில் விளையும் உருளைக்கிழங்கு


பாரம்பரிய வழிகள் ஒருபுறம் இருக்க, இப்படிப்பட்ட புதிய வழிகளால், வித்தியாசமான விவசாய வழிமுறைகளும், அதிகப்படியான மகசூலும், வளங்களின் அதிகப்படியான பயன்பாடும் ஏற்படுகின்றது என்பதை மறுப்பதற்கில்லை.

உருளைக்கிழங்கு காற்றில் வளரும் என்று யாராவது கூறினால், அதை கேட்க உங்களுக்கு விசித்திரமாக இருக்கலாம். ஆனால் இப்போது வந்துள்ள ஒரு புதிய தொழில்நுட்பத்தால் இது சாத்தியமாகியுள்ளது. இப்போது உருளைக்கிழங்கை வளர்க்க நிலமும் மண்ணும் தேவையில்லை.

ஹரியானாவின் (Haryana) கர்னால் மாவட்டத்தில் அமைந்துள்ள உருளைக்கிழங்கு தொழில்நுட்ப மையம் இதைச் செய்து காட்டியுள்ளது. இந்த தொழில்நுட்பம் ஏரோபோனிக் நுட்பம் என்று அழைக்கப்படுகிறது. மேலும் இதன் மூலம் மகசூலும் பத்து மடங்கு அதிகமாக இருக்கும்.

விவசாயிகள் இப்போது நிலம் மற்றும் மண் இல்லாமலேயே உருளைக்கிழங்கை பயிரிட முடியும். இந்த நுட்பத்தால் உருளைக்கிழங்கு மகசூலும் அதிகரிக்கும். இப்போது விவசாயிகள் பாரம்பரிய விவசாயத்திற்கு பதிலாக இந்த புதிய தொழில்நுட்பத்துடன் உருளைக்கிழங்கை வளர்க்க முடியும்.

கர்னாலின் உருளைக்கிழங்கு (Potato) தொழில்நுட்ப மையம், கர்னாலின் சர்வதேச உருளைக்கிழங்கு மையத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதற்குப் பிறகுதான் ஏரோபோனிக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருளைக்கிழங்கு பயிரிட இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

ஏரோபோனிக் தொழில்நுட்பத்தில் தாவரங்களுக்கு எந்த ஊட்டச்சத்துக்கள் வழங்கப்பட்டாலும் அவை தொங்கும் வேர்களிலிருந்து வழங்கப்படுகின்றன என்று டாக்டர் முனிஷ் சிங்கல் கூறுகிறார். இந்த நுட்பத்திற்கு மண் மற்றும் நிலம் தேவையில்லை. இந்த நுட்பத்தின் உதவியுடன் உருளைக்கிழங்கை நன்றாக தயாரிக்க முடியும்.

இந்த நுட்பத்தின் காரணமாக மண்ணால் பரவும் நோய்களிலிருந்து பயிருக்கு வரும் ஆபத்துகள் நீக்கப்படுகின்றன என்றும் டாக்டர் முனீஷ் கூறுகிறார். பாரம்பரிய விவசாய முறையை விட ஏரோபோனிக் நுட்பங்கள் அதிக அளவில் மகசூல் அளிக்கின்றன.

இப்படிப்பட்ட புதிய நுட்பங்களால் விவசாயத் (Agriculture) துறைக்கு அதிக நன்மை கிடைக்கிறது. பாரம்பரிய வழிகள் ஒருபுறம் இருக்க, இப்படிப்பட்ட புதிய வழிகளால், வித்தியாசமான விவசாய வழிமுறைகளும், அதிகப்படியான மகசூலும், வளங்களின் அதிகப்படியான பயன்பாடும் ஏற்படுகின்றது என்பதை மறுப்பதற்கில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக