மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக சாம்சங் கேலக்ஸி ஏ32 5ஜி இருக்கிறது. 5ஜி ஆதரவுடன் கூடிய இந்த ஸ்மார்ட்போன் ஐரோப்பிய சந்தையில் அறிமுகமாகியுள்ளது. பிற சந்தைகளில் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி ஏ32 5ஜி ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஒற்றை மாறுபாட்டில் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை இந்திய மதிப்புப்படி ரூ.24,000 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் கருப்பு, ப்ளூ, வெள்ளை மற்றும் வயலட் ஆகிய நான்கு வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.
சாம்சங் கேலக்ஸி ஏ32 5ஜி அம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் எல்சிடி வசதியுடன் வருகிறது. இது எச்டி ப்ளஸ் 720 பிக்சல் தெளிவுத்திறனுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 எம்பி இரண்டாம் நிலை கேமரா, 5 எம்பி மூன்றாம் நிலை கேமரா, 2 எம்பி நான்காம் நிலை கேமரா இருக்கிறது. அதோடு முன்பக்கத்தில் 13 எம்பி செல்ஃபி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
மேலும் சாம்சங் கேலக்ஸி ஏ32 ஸ்மார்ட்போனில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதியுடன் வருகிறது. இதில் மீடியா டெக் டைமன்சிட்டி 720 சிப்செட் மூலம் வருகிறது. சாம்சங் கேலக்ஸி ஏ32 ஸ்மார்ட்போன் 5ஜி ஆதரவுடன், ஆண்ட்ராய்டு 11 அவுட் ஆஃப் பாக்ஸ் வசதியுடன் வருகிறது.
8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பகத்துடன் ஜோடியாக இருக்கும் மீடியா டெக் டைமன்சிட்டி 720 சிப்செட்டிலிருந்து இந்த தொலைபேசி சக்தியை ஈர்க்கிறது. சாம்சங் கேலக்ஸி ஏ 32 5 ஜியின் மென்பொருள் அம்சம் ஒன் யுஐ 3.0 தனிப்பயன் தோலுடன் ஆண்ட்ராய்டு 11 அவுட்-ஆஃப்-பாக்ஸை உள்ளடக்கியது.
மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி, 15 வாட்ஸ் வேகமான சார்ஜிங் ஆதரவு ஆகியவையுடன் வருகிறது. பாதுகாப்பு அம்சத்திற்கு பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் வசதி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவிற்கு வரும் என கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக