Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 5 பிப்ரவரி, 2021

மீண்டும் சூடுபடுத்திய பின் விஷமாக மாறும் 10 உணவுகள்!


திடீர் பசி ஏற்படும்போது, ஏற்கனவே மிச்சமிருக்கும் உணவு நமக்கு வரப்பிரசாதமாக காணப்படுகிறது. அவற்றை மீண்டும் சுட வைத்து சாப்பிட்டு நம் பசியை போக்கிக்கொள்கிறோம். ஆனால் எல்லா உணவு வகைகளையும் இப்படி சூடாக்கி சாப்பிட முடியாது. 

நம் அவசர பசியை போக்க நாம் செய்யும் இந்த செயல் நம் உயிரையும் கூட பறித்து விடலாம்!! சில உணவுகளை நாம் இரண்டாவது முறையாக சூடாக்கும் போது அவற்றில் நச்சுத்தன்மை ஆட்கொள்கிறது. எந்தெந்த உணவுகளை நாம் சூடாக்கக்கூடாது என்பதை இங்கே காணலாம். 

அதிக புரதச்சத்து இருப்பதால், சமைத்த கோழியை மீண்டும் சூடாக்குவது பல செரிமான சிக்கல்களை ஏற்படுத்தும். எனவே சாலட் அல்லது ரொட்டியுடன் சேர்த்து அதை அப்படியே உட்கொள்வது சிறந்ததாக இருக்கும். சமைத்த சிக்கனை மீண்டும் சூடாக்கினால் சிக்கலில் மாட்டிக்கொள்வீர்!

மற்ற பச்சை காய்கறிகளைப் போலவே, கீரையில் இரும்பு மற்றும் நைட்ரேட்டுகள் நிறைந்துள்ளன. சமைத்த கீரை மீண்டும் சூடாக்கப்பட்டால், இந்த நைட்ரேட்டுகள் நைட்ரைட்டுகள் மற்றும் பிற காசினோஜெங்களாக மாற்றப்படுகின்றன, இது உங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். ஆகையால் கீரையை கண்டவுடன் உண்டு விடுவது நல்லது!!

ஃபுட் ஸ்டாண்டர்ட் ஏஜென்சியின் படி, சமைக்காத அரிசியில் பாக்டீரியாக்கள் உள்ளன. அவை உணவில் விஷத்தன்மையை கலக்கும் இயல்புடையவை. இப்படிப்பட்ட பாக்டீரியாக்கள் மீண்டும் சுடவைக்கப்பட்டால் அவை பன்மடங்காகப் பெருகின்றன.

இரண்டாவது முறையாக சுடவைக்கக்கூடாத உணவுகளில் அடுத்து வருவது முட்டை. இந்த புரதச்சத்து நிறைந்த காலை உணவை மீண்டும் சூடாக்குவது அவற்றில் நச்சுத்தன்மையை அதிகரிக்கக்கூடும். இது உங்கள் செரிமான அமைப்பில் பாதிப்பை ஏற்படுத்தும்.

ஆய்வுகளின் படி, கனோலா, சூரியகாந்தி போன்ற எண்ணெய்களை மீண்டும் சூடாக்குவது இதயம் தொடர்பான பிரச்சினைகளின் அபாயத்தை அதிகரிக்கும். மீண்டும் சூடுபடுத்தப்படும் போது இவை நச்சுக்களை வெளியிடலாம்.

சமைத்த உருளைக்கிழங்கை நீண்ட நேரத்திற்கு அப்படியே வைத்தாலோ, அல்லது, மீண்டும் சூடாக்கினாலோ அவை விஷமாக மாறலாம். போட்யூலிசம் காரணமாக இந்த மாறுதல் ஏற்படுகிறது. ஆகையால் இதை சமைத்த உடனேயே முழுதாக உட்கொண்டு விடுவது நல்லது.

சுவையான காளான்களை சமைத்தவுடன் உட்கொள்வது நல்லது. சரியான தட்பவெட்பத்தில் வைக்கப்படாவிட்டாலோ, அல்லது, மீண்டும் சூடுபடுத்தப்பட்டாலோ, காளானில் உள்ள புரதச்சத்து வெகுவாக மோசமடைந்து நச்சுத்தன்மையைப் பெறுகிறது.

கடல் உணவை சமைத்தவுடன் உட்கொள்வது சிடந்தது. எஃப்.டி.ஏ-வின் படி, கடலிலிருந்து பிடிக்கப்பட்டு உடனே உறைய வைக்கப்பட்ட கடல் உணவுகள் மீண்டும் சூடாக்க பாதுகாப்பானவை. ஆனால், பதப்படுத்தப்படாத, புதிதாக கடலில் இருந்து பிடிக்கப்பட்ட மீன், நண்டு போன்றவற்றை சமைத்தவுடனேயே உட்கொள்வதுதான் சிறந்தது. அவற்றை மீண்டும் சுடவைப்பது நச்சுத்தன்மையை உண்டாக்கும் பாக்டீரியாக்களை உருவாக்கும்.

பொதுவாகவே கொத்தமல்லி, அதன் மெல்லிய தண்டு ஆகியவற்றை பச்சையாக உட்கொள்வது நல்லது. கண்டிப்பாக அதை இரண்டாவது முறையாக சுடவைக்கக்கூடாது. அதில் அதிக நைட்ரேட் உள்ளன. அதை நீங்கள் மீண்டும் சூடாக்கினால் அதன் நல்ல குணங்கள் மாறி அதில் நச்சுத்தன்மையே அதிகரிக்கும்.

பீட்ரூட்டில் நைட்ரேட்டுகள் அதிகம் உள்ளன. மேலும் அது மீண்டும் வெப்பத்திற்கு வெளிப்படும் போது, ​​அவற்றில் நச்சுத்தன்மை வரும். பீட்ரூட் போட்டு செய்யப்பட்ட எந்த ஒரு உணவு வகையையும் மீண்டும் சூடாக்குவது புற்றுநோயியல் பண்புகளை உணவில் ஏறப்டுத்தும். இதன் விளைவாக கருவுற்றலில் சிக்கல், புற்றுநோய் ஆகியவை ஏற்படலாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக