Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 5 பிப்ரவரி, 2021

தேர்வில் மாணவர்கள் மதிப்பெண்களை அள்ள உதவும் சீனாவின் Feng Shui Tips ..!!!

 தேர்வில் மாணவர்கள் மதிப்பெண்களை அள்ள உதவும் சீனாவின் Feng Shui Tips ..!!!

ஃபெங் சுய் (Feng Shui)  என்னும் சீன தத்துவத்தில் குறிப்பிட்டுள்ள சில உத்திகளை பின்ன்பற்றினால், மாணவர்கள் தேர்வுகளில் மதிப்பெண்களை அள்ளலாம். 

பொது தேர்வுகள், போட்டித்தேர்வுகள் என அனைத்து விதமான் தேர்வுகளுக்காகவும் மாணவர்கள் தயாராகி வருகின்றனர்.  நன்றாக படித்தும் மார்க் அசரியாக வரவில்லை என விரக்தி அடையும் மாணவர்கள் பலரை பார்க்கிறோம். சிலர் தோல்வியில் துவண்டு விபரீதமான முடிவுகளை எடுக்கின்றனர். 

தேர்வு நெருங்க நெருங்க சில குழந்தைகளுக்கு மன அழுத்தம், பதற்றம் ஆகியவை அதிகரிக்கிறது.  அத்தகைய சூழ்நிலையில், ஃபெங் சுய் (Feng Shui)  என்னும் சீன தத்துவத்தில் குறிப்பிட்டுள்ள சில உத்திகளை பின்ன்பற்றினால், மாணவர்கள் தேர்வுகளில் மதிப்பெண்களை அள்ளலாம்.

ஃபெங் சுய்  தத்துவம் நீர் மற்றும் காற்றை அடிப்படையாகக் கொண்டது. ஃபெங் சுய் தத்துவத்தில் குறிப்பிட்டுள்ள குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம் மாணவர்கள் மிக எளிதாக தேர்வுகளில் சிறந்த முறையில் வெற்றி பெறலாம். மாணவர்கள் பின்பற்ற வேண்டிய விஷயங்கள் இதோ:

- உங்கள் புத்தகம், நோட்டுகள் ஆகியவற்றில் சிவப்பு அட்டையை போடுங்கள். முடிந்த வகையில் சிவப்பு நிற பொருட்களை பயன்படுத்துங்கள். சிவப்பு நிறம் உங்கள் நம்பிக்கையை அதிகரிக்கும். மேலும், சிவப்பு நிறம் நல்ல அதிர்ஷ்டத்தின் அடையாளமாகும்.

- நீங்கள் படிக்கும் அறையில், அதிக அளவில் சாமான்கள் அல்லது பொருட்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். காலியான அறைகளில் நேர்மறை ஆற்றல் அதிகம் இருக்கும்.

- யாரும் வந்து தொந்தரவு கொடுக்காத ஒரு தனிப்பட்ட அறையில் படிக்கவும். அதன் மூலம் நீங்கள் முழு கவனத்துடன் படிக்கலாம். 

- பல குழந்தைகளுக்கு அவர்கள் வீட்டின் வெவ்வேறு இடங்களில் படிக்கும் பழக்கம் உண்டு. இது உங்களுக்கு மறதியை ஏற்படுத்துகிறது. இதனால் படித்தது மறந்து போகலாம். அத்தகைய சூழ்நிலையில், வெவ்வேறு இடங்களுக்குப் பதிலாக ஒரே இடத்தில் படிக்கவும். குழந்தைகள் படிக்கும் இடம் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

- குழந்தைகள் படிக்கும் போது எப்போதும் ஒரு ஆளுமை நிலையில் அமர வேண்டும். படிக்கும் போது வேறு எதிலும் கவனம் செலுத்தக் கூடாது.

- படிக்கும் போது எப்போதும் அறையில் பிரகாசமான ஒளி இருக்க வேண்டும். அதே சமயத்தில் ஒளி உங்கள் கண்களைத் உறுத்தாத வகையில் இருக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக