
மோட்டோரோலா நிறுவனம் இன்று முதல் முறையாக மோட்டோ E7 பவர் ஸ்மார்ட்போன் சாதனத்தை விற்பனைக்கு அறிமுகம் செய்கிறது. இந்த அட்டகாசமான புதிய மோட்டோ E7 பவர் ஸ்மார்ட்போன் நம்ப முடியாத மலிவு விலையில் ரூ.7,499 என்ற ஆரம்ப விலை முதல் வாங்குவதற்குக் கிடைக்கிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன் எங்கு? எப்படி வாங்கலாம்? என்று பார்க்கலாம்.
மோட்டோ E7 பவர் ஸ்மார்ட்போன்
மோட்டோ E7 பவர் ஸ்மார்ட்போன் தனது முதல் விற்பனையை பிளிப்கார்ட்டில் இன்று மதியம் 12 மணிக்கு துவங்குகிறது. இந்த மோட்டோ E7 பவர் ஸ்மார்ட்போனின் 2ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலின் விலை வெறும் ரூ. 7499 ஆகும். அட்டகாசமான அம்சத்துடன் இப்படி ஒரு மலிவு விலையை யாரும் எதிர்பார்த்திற்க முடியாது
எப்போதும் டிமாண்ட் அதிகமாக இருக்கும் முதல் விற்பனை
அதேபோல், இதன் 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலின் விலை ரூ. 8,299 ஆகும். இந்த போன் டஹிடி ப்ளூ மற்றும் கோரல் ரெட் வண்ண விருப்பங்களில் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனை வாங்க விருப்பம் உள்ள நபர்கள் உடனே பிளிப்கார்ட் சென்று உங்கள் கார்டில் ஆட் செய்து வைத்துக்கொள்ளுங்கள். முதல் விற்பனையில் எப்போதும் டிமாண்ட் அதிகமாக இருக்கும் என்பதை மறக்க வேண்டாம்.
மோட்டோ E7 பவர் மோட்டோ E7 பவர் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம்
- 6.5 இன்ச் 1600 x 720 பிக்சல்கள் கொண்ட எச்டி பிளஸ் மேக்ஸ்விஷன் வாட்டர் டிராப்- நாட்ச் ஸ்டைல் டிஸ்பிளே
- மீடியாடெக் ஹீலியோ ஜி 25 சிப்செட்
- 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ்
- மைக்ரோ SD கார்டு வழியாக 1TB வரை ஸ்டோரேஜ்
- டூயல் கேமரா அமைப்பு
- 13 மெகா பிக்சல் பிரைமரி கேமரா
- 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா
- எல்இடி ப்ளாஷ்
பேட்டரி மற்றும் கனெக்ட்டிவிட்டி
- 5 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா
- 4 ஜி
- புளூடூத் 4.2
- வைஃபை 802.11 b/g/n (2.4GHz) 2×2 MIMO
- யூ.எஸ்.பி டைப் சி போர்ட்
- ஜி.பி.எஸ்.
- 3.5 ஆடியோ ஜாக்
- 10W சார்ஜிங் ஆதரவு
- 5,000 எம்ஏஎச் பேட்டரி
- நிறம்: டஹிடி ப்ளூ (Tahiti Blue) மற்றும் கோரல் ரெட் (Coral Red)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக