எந்த 'குறிப்பிட்ட' சட்டத்துக்குள்ளும் வராமல் தன்னிச்சையாக செயல்பட்ட சமூகவலைதளங்கள் மற்றும் ஆன்லைன் ஊடகங்களுக்கு புதிய நெறிமுறைகளை கொண்டு வந்து கடிவாளம் போட்டுள்ளது மத்திய அரசு
இந்தியாவில் 53 கோடி
வாட்சாப் பயனர்கள், 44.8 கோடி யூடியூப் பயன்ர்கள், முகநூல் அதாவது
பேஸ்புக்கில் 41 கோடி
பயனர்கள், ட்விட்டர் 1.75 கோடி
பயனர்கள் என
மிகப்பெரிய சந்தையாக உள்ளது.
இந்நிலையில், எந்த
'குறிப்பிட்ட' சட்டத்துக்குள்ளும் வராமல்
தன்னிச்சையாக செயல்பட்ட சமூகவலைதளங்கள் மற்றும் ஆன்லைன் ஊடகங்களுக்கு புதிய
நெறிமுறைகளை கொண்டு
வந்து
கடிவாளம் போட்டுள்ளது மத்திய
அரசு
இனி,
சமூகவலைதளங்கள் (Social Media) தங்கள் இஷ்டத்துக்கு ஐடிகளை
முடக்க
கூடாது.
புகார்களை கேட்டறிய அதிகாரியை நியமித்து தகுந்த
காரணத்தை 15 நாட்களுக்குள் தந்தாக
வேண்டும்.
ஒவ்வொருமாதமும் எத்தனை
குறைகளை கேட்டோம் என்பது
தொடர்பாக முழுமையான தகவல்களை வேண்டும்.
பெண்கள் கண்ணியத்தை பாதிக்கும் வகையிலான படங்களை புகாரளித்த 24 மணி
நேரத்துக்குள் நீக்க
வேண்டும்.
மிக முக்கியமாக சமூக வலைதளங்கள், அதில் வெளியிடப்படும் தவறான போலி செய்திகளுக்கு பொறுப்பேறக் வேண்டும். இனி சமூக ஊடகங்கள், தாங்க வெறும் ஊடகம் மட்டுமே என சொல்லி தப்பிக்க முடியாது. போலி செய்தி அல்லது வன்முறையை பரப்பும் செய்திகள், நாட்டின் இறையாண்மையை பாதிக்கும் வகையிலான செய்திகளை பதிவு செய்தவருடன், குறிப்பிட்ட சமூகவலைதள நிர்வாகிகள் குற்றத்துக்கு உடந்தை என கருதப்படுவர்.
போலி
செய்தியை "முதலில்" பரப்பியவர் யார்
என்ற
விவரத்தை சமூகவலைதளம் பகிரவேண்டும்.
இந்நிலையில், பேஸ்புக் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாலர் இது
குறித்து கூறுகையில், "பேஸ்புக் இந்தியாவுடன் கூட்டாக செயல்படும் நிறுவனம் என்பதோடு, பயனர்
பாதுகாப்பு என்பது
எங்கள்
தளங்களுக்கு ஒரு
முக்கியமான விஷயம்.
இந்தியாவின் அற்புதமான டிஜிட்டல் மாற்றத்திற்கு ஊக்கம்
அளிக்கும் வகையில் எங்கள்
தளங்கள் ஒரு
முக்கிய பங்கை
கொண்டிருக்கும் என்பதை
உறுதிப்படுத்த நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம்" என்று செய்தித் தொடர்பாளர் மேலும்
தெரிவித்தார்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக