23 பிப்., 2021

Asus ROG Phone 5 மார்ச் 10 அறிமுகமா? அட்டகாசமான கேமிங் ஸ்பெக்ஸ் உடன் அறிமுகமா?

அறிமுகம்

Asus நிறுவனம் அடுத்த மாதம் அதன் புதிய கேமிங் ஸ்மார்ட்போன் மாடலான அசுஸ் ராக் போன் 5 சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்யுமென்று கடந்த வாரம் செய்திகள் வெளியாகியது. அதனைத் தொடர்ந்து இப்போது இந்த புதிய ஸ்மார்ட்போன் வரும் மார்ச் 10ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று உறுதியான தகவல் அசுஸ் நிறுவனத்திடமிருந்து வெளிவந்துள்ளது.

கடந்த சில வாரங்களில் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய சில லீக்ஸ் தகவல்கள் வெளியாகி வந்தது, ஆனால் இது எப்போது இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்ற தகவல் தெரியாமல் இருந்து வந்தது. நீண்ட நாட்கள் காத்திருப்புக்குப் பின்னர், ஒருவழியாக இப்போது இந்த ஸ்மார்ட்போனின் அறிமுகம் பற்றி உறுதியான தகவலை நிறுவனம் தற்பொழுது வெளியிட்டுள்ளது.

வரவிருக்கும் கேமிங் ஸ்மார்ட்போன் மார்ச் 10 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும். ஆசஸ் ROG ஸ்மார்ட்போன் 5 பிளிப்கார்ட் வழியாக பிரத்தியேகமாக விற்பனைக்கு வரும் என்பதனையும் நிறுவனம் அதன் போஸ்டர் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் இ-காமர்ஸ் தளம் ஏற்கனவே வரவிருக்கும் அறிமுகத்திற்கான மைக்ரோசைட்டை உருவாக்கி, இன்னும் கூடுதல் நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.

வெளியீட்டு நிகழ்வு மார்ச் 10 ஆம் தேதி இந்தியாவில் மாலை 4:30 மணிக்கு ஆன்லைன் மூலம் தொடங்கும். சமீபத்தில் Asus ROG Phone 5 சாதனம் கீக்பெஞ்ச் மார்க்கிங் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.அப்போது எதிர்பார்க்கப்பட்ட சிறப்பம்சங்களுடன் இப்போது உறுதியான சிறப்பம்சங்களை ஒப்பிட்டு பார்க்கையில், அனைத்தும் ஒரே மதியாக தான் தெரிகிறது. Asus ROG Phone 5 சிறப்பம்ச விபரங்களை பார்க்கலாம்.

Asus ROG Phone 5 சிறப்பம்சம்

 • 6.78' இன்ச் 1080x2400 பிக்சல்கள் கொண்ட முழு எச்டி பிளஸ் ஓஎல்இடி டிஸ்பிளே
 • 144 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம்
 • 8 ஜிபி ரேம் 256ஜிபி ஸ்டோரேஜ்
 • ஸ்னாப்டிராகன் 888 சிப்செட்
 • ஆண்ட்ராய்டு 11
 • மூன்று பின்புற கேமரா அமைப்பு
 • 64 மெகாபிக்சல் பிரைமரி கேமரா
 • 16 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ்
 • 8 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா
 • 32 மெகாபிக்சல் செல்பி ஸ்னாப்பர்
 • 65W பாஸ்ட் சார்ஜிங்
 • 6000mAh பேட்டரி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்