Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 23 பிப்ரவரி, 2021

ரொம்ப வித்தியாசமான தோற்றத்தில் உருவான மின்சார கார்... கதவு இருக்கும் பக்கத்தை பார்த்த வாயடைச்சு நிப்பீங்க!!

 

ரொம்ப வித்தியாசமான தோற்றத்தில் உருவாக்கப்பட்ட மின்சார கார்... கதவு இருக்கும் பக்கத்தை பார்த்த வாயடைச்சு நிப்பீங்க!!

இதுவரை கண்டிராத மற்றும் வித்தியாசமான தோற்றத்தில் ஓர் மின்சார கார் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இந்த கார் பற்றிய கூடுதல் சுவராஷ்ய தகவலை இப்பதிவில் காணலாம்.

1950களில் பிஎம்டபிள்யூ நிறுவனம் விற்பனைச் செய்து வந்த பிரபலமான வாகனங்களில் ஐசெட்டா (Isetta) மாடலும் ஒன்று. இந்த வாகனத்தை பற்றி அறிந்தவர்கள் மிக குறைவே. ஆனால், இந்த நிலை நீண்ட நாட்கள் நீடிக்கப்போவதில்லை. ஏனெனில் இக்காரை தழுவிய ஓர் காம்பேக்ட் ரக மின்சார வாகனத்தை சுவிஸ் நாட்டைச் சேர்ந்த மைக்ரோ நிறுவனம் உருவாக்க திட்டமிட்டுள்ளது.

இதனடிப்படையில் ஓர் முன்மாதிரி மாடலையும் நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது. மைக்ரோலினோ 2.0 எனும் பெயரில் அந்த வாகனத்தை நிறுவனம் தற்போது வெளியீடும் செய்திருக்கின்றது. இந்த வாகனத்தில் இருவர் மட்டுமே அமர்ந்து செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஒருவர் பின் ஒருவர் அமர்கின்ற வகையில் இருக்கை அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கின்றது. நால்வராலும் அமர்ந்து செல்ல முடியும். ஆனால், சற்று மிக நெருக்கமாக அமர்ந்து செல்ல வேண்டியிருக்கும்.

தினசரி பயன்பாட்டைக் கருத்தில் கொண்டு இவ்வாகனம் உருவாக்கப்பட்டிருப்பதால் இத்தகைய உருவ அமைப்பு மைக்ரோலினோ 2.0விற்கு கொடுக்கப்பட்டிருக்கின்றது. தொடர்ந்து, நகர பயன்பாட்டைக் கருத்தில் கொண்டு இந்த மின் வாகனம் உருவாக்கப்பட்டிருப்பதாலும் இதற்கு மிக மிக சிறிய உருவம் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

இதன் இருக்கை மற்றும் உருவம் மட்டுமில்லைங்க காருக்குள் நுழையும் விதமும் சற்று வித்தியாசமானதாக கொடுக்கப்பட்டிருக்கின்றது. நாம் இதுவரை பார்த்த அனைத்து கார்களிலுமே பக்கவாட்டு மற்றும் பின் புறங்களில்தான் உள் நுழைதல் மற்றும் வெளியேறுதலுக்கான வாயில் கொடுக்கப்பட்டிருக்கும்.

ஆனால், இந்த காரில் முற்றிலுமாக வித்தியாசமாக முன்பக்கத்தின் ஸ்டியரிங் பகுதியில் டூர் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இதுமாதிரியான நுழுவு வசதியை இதுவரை எந்தவொரு காரும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. தொடர்ந்து பின் பக்கத்தை பார்க்க உதவும் கண்ணாடியிலேயே வாகனத்திற்கான ஹெட்லைட் கொடுக்கப்பட்டிருக்கின்றது. ஊர்ந்து செல்லும் நத்தையின் கண்களைப் போன்று இதன் அமைப்பு இருக்கின்றது.

பிஎம்டபிள்யூவின் ஐசெட்டா கார் மூன்று சக்கரங்கள் கொண்ட வாகனமாகும். ஆனால், மைக்ரோலினோ 2.0 வில் நான்கு சக்கரங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இதுமட்டுமின்றி, இதன் கேபினில் அதிக இட வசதி மற்றும் சொகுசு வசதிகளும் வழங்கப்பட்டிருப்பதாக தயாரிப்பு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஆனால், இதில் ஏசி மற்றும் சவுண்ட் சிஸ்டம் வசதி வழங்கப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. மாறாக ஒயர்லெஸ் ஸ்பீக்கர் மற்றும் போனை நிலை நிறுத்துக் கொள்ளும் வகையில் இட வசதிக் கொடுக்கப்பட்டிருப்பதாகவும், அதில் உதிரிபொருளாக வாங்கி தேவையான பொருட்களை வைத்துக் கொள்ளலாம் என கூறப்படுகின்றது.

இந்த காரின் அதிக உறுதி தன்மைக்காக அழுத்தமான ஸ்டீல் மற்றும் அலுமினியம் மோனோகோக் ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளன. இது அதிக உறுதியானது, அதேசமயம், இலகு ரக எடைக் கொண்டதும் கூட. வாகனத்தின் பின்பகுதியில் லக்கேஜ்களை எடுத்துச் செல்லும் வசதி வழங்கப்பட்டிருக்கின்றது. ஆனால், குறைந்தளவு பொருட்களை மட்டுமே அதில் எடுத்துச் செல்ல முடியும்.

இம்மாதிரியான தனி சிறப்புகள் இவ்வாகனத்தை இரு விதமான பேட்டரி பேக்கில் விற்பனைக்கு வழங்க திட்டமிட்டிருக்கின்றது. ஒரு முழுமையான சார்ஜில் 126 கிமீ ரேஞ்ஜை வழங்கக் கூடிய வசதி அல்லது 201 கிமீ ரேஞ்ஜை வழங்கக் கூடிய வசதி என இரு விதமான ரேஞ்ஜ் திறன்களில் இவ்வாகனத்தை விற்பனைச் செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதன் விலை மற்றும் பிற முக்கிய தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. விற்பனைக்கு வரும்பட்சத்தில் இதுகுறித்த தகவலை நிறுவனம் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த வருடத்தின் செப்டம்பர் மாதம் இவ்வாகனம் விற்பனைக்கு வந்துவிடலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதன் இந்திய வருகை என்பது கேள்விக்குறியே.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக