
பொதுவாக பெற்றோர்கள் குழந்தைகளுக்கு அன்பளிப்பு வழங்குவது என்பது வழக்கம். குழந்தைகள் விரும்பும் பொம்மை, விளையாட்டு பொருட்கள் போன்றவைகள் அன்பளிப்பாக வழங்கப்படும். வயதுக்கேற்ப பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு அன்பளிப்பு வழங்குவார்கள்.
பயன்படுத்திய பொம்மை விற்கும் கடை
அப்படி அமெரிக்காவில் பெற்றோர் தங்களது குழந்தைக்கு வாங்கிய பொம்மை ஒன்றில் அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. பெற்றோர் தங்களது குழந்தைக்கு சர்ப்ரைஸாக பொம்மை ஒன்றை வாங்கி கொடுத்துள்ளனர். பெற்றோர் வாங்கிய பொம்மை கடை முன்னதாகவே குழந்தைகள் பயன்படுத்திய பொம்மை விற்கும் கடை.
குழந்தைக்கு அன்பளிப்பு
முன்னதாக யாரோ பயன்படுத்திய பொம்மை அது என்பதால் பெற்றோர் குழந்தைக்கு அந்த பொம்மையை கொடுப்பதற்கு முன்னாள் அதை சுத்தம் செய்து கொடுக்க முயன்றுள்ளனர். பொம்மை பிரித்து சுத்தம் செய்யும்போது உள்ளே ஏதோ தட்டுப்பட்டுள்ளது.
பொம்மைக்குள் இருந்த கவர்
பொம்மையை பிரித்து பார்த்தபோது அதற்குள் இரண்டு பிளாஸ்டிகர் கவர் பார்சல் இருந்திருக்கிறது. இதை பார்த்ததும் அந்த குழந்தையின் தாய் அதிர்ச்சியில் திகைத்துள்ளார். மனைவி குரல் கேட்டு வந்து பார்த்த கணவர் அந்த பார்சல் என்னவென்று பார்த்துள்ளார்.
போலீஸாரிடம் புகார்
பொம்மைக்குள் இருந்த பிளாஸ்டிக் கவருக்குள் சுமார் 5000 போதை மாத்திரைகள் இருந்துள்ளது. இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் மாத்திரைகளை கைப்பற்றினர்.
விளையாடும் பொம்மைக்குள் போதை மாத்திரைகள்
பெற்றோர்கள் பொம்மை சுத்தம் செய்து கொடுக்க முயன்றதுக்கும், அதுக்குள் இருந்த போதை மாத்திரையை கைப்பற்றி போலீஸாருக்கு தகவல் கொடுத்த செயலையும் போலீஸார் பாராட்டினர். குழந்தை விளையாடும் பொம்மைக்குள் போதை மாத்திரைகள் இருந்தது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
சமூகவலைதளத்தில் எச்சரித்த போலீஸ்
குழந்தையின் கையில் இந்த போதை மாத்திரை கிடைத்திருந்தால் என்னவாகி இருக்கும் என்ற எண்ணம் தாயை மிகவும் பாதித்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் அப்பகுதி மக்களை மட்டுமின்றி அனைத்து தரப்பு பெற்றோர்களையும் சிந்திக்க வைத்துள்ளது. போலீஸார் இந்த நிகழ்வை சமூகவலைதளம் மூலமாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக