இப்போது அனைத்து மக்களிடமும் ஸ்மார்ட்போன்கள் இருப்பதால் வீட்டில் இருந்தபடியே பல்வேறு பொருட்களை வாங்குகின்றனர். அதாவது ஸ்மார்ட்போனில் அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட பல்வேறு ஆன்லைன் தளங்கள் மற்றும் செயலிகளை பயன்படுத்தி தான் மக்கள் பொருட்களை வாங்குகின்றனர்.
குறிப்பாக இதுபோன்ற வலைத்தளங்கள் குறிப்பிட்ட சலுகைகள் கொடுப்பதாலும், பின்பு சரியான நேரத்தில் பொருட்கள் வீட்டிற்கு வருவதாலும் மக்கள் அதிகமாக இதை பயன்படுத்துகின்றனர். மேலும் பண்டிகை மற்றும் விழாக்கள் போன்ற சமயங்களில் அதிரடி விலைகுறைப்பு உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில் மகனின் பிறந்த நாளுக்கு அம்மா கொடுத்த பரிசு ஒன்று இணையத்தில் அதிக வைரலாகி வருகிறது. அப்படி என்ன வைரலாகும் பரிசு என்பதை பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
இளைஞர் கேன் வில்லியம்ஸ்
சிறுவர்கள் முதல் பெரியவர்களை வரை ஆன்லைன் ஷாப்பிங்-ல் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இளைஞர் கேன் வில்லியம்ஸ் என்பவர் அடிக்கடி ஆன்லைன் ஷாப்பிங் செய்து வந்துள்ளார்.
குறிப்பிட்ட சொல்ல வேண்டும் என்றால், இவர் எந்நேரமும் அமேசான், இ-காமர்ஸ் போன்ற ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்தில் எதையாவது ஆர்டர் செய்துக்கொண்டே இருந்துள்ளார்.
அமேசான் பார்சல் போலவே கேக்
இதை நன்கு கவனித்த கேன் வில்லியம்ஸின் தாய் நினா ஏவான்ஸ், அவரது பிறந்த நாளுக்கு ஒரு மறக்க முடியாத பரிசு ஒன்றை கொடுக்க நினைத்துள்ளார். அதற்கு வேண்டி அமேசான் பார்சல் போலவே கேக் செய்து மகனுக்கு பிறந்த நாள் பரிசாக கொடுத்துள்ளார். மேலும் இதை பார்தத் கேன் வில்லியம்ஸ் மிகவும் உற்சாகம் அடைந்தார்.
தொழில் ரீதியாக கேக் வடிவமைத்து வருபவர்
பின்பு நினா ஏவான்ஸ் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த கேக் படத்தை பகிர்ந்துள்ளார். வெளிந்த தகவலின்படி, நினா
ஏவான்ஸ் தொழில்
ரீதியாக கேக்
வடிவமைத்து வருபவர். மேலும்
இவர்
மகனுக்காக நான்கு
லேயர்
கொண்ட
சாக்லேட் கேக்காக வடிமைத்தார் என்பது
குறிப்பிடத்தக்கது. நினா
ஏவான்ஸ் சமூகவலைத்தளத்தில் பதிவிட்ட புகைப்படம் இப்போது வைரலாகி வருகிறது. அதே
சமயம்
மகனின்
பிறந்த
நாளுக்க வித்தயாசமான பரிசு
கொடுத்தது அதிக
இடங்களில் கவனம்
பெற்றுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக