
மோட்டோரோலா ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு அறிவித்துள்ளது மோட்டோரோலா நிறுவனம். அதன்படி இந்த சாதனத்தின் முந்தைய விலை ரூ.94,999-ஆக இருந்தது, தற்சமயம் அறிவிக்கப்பட்டுள்ள விலைகுறைப்பின் மூலம் ரூ.74,999-விலையில் வாங்க முடியும். மேலும் இந்த புதிய விலை நிறுவனத்தின் இணையதளத்தில் நேரலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மோட்டோரோலா ரேசர்
மோட்டோரோலா ரேசர் சாதனம் 6.2-இன்ச் மடிக்கக்கூடிய டிஸ்பிளே வசதி மற்றும் 21: 9 விகிதம் மற்றும் 2,142x876 பிக்சல்கள் தீர்மானம் உடையது, பின்பு மூடப்படும்போது 2.7-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும் எனக் குறிப்பிடப்பட்டுள்ள
மோட்டோரோலா ரேசர் சாதனம் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவரும், பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ளது. அதேபோல் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர் வசதி
இந்த மொபைல்போனின் சிப்செட் பற்றி பேசுகையில், குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர் வசதியுடன் வெளிவரும், பின்பு
வலக்கமான சிம் கார்டு ஆதரவுக்கு பதிலாக இ-சிம் ஆதரவுடன் இந்த ரேசர் சாதனம் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 9.0 Pie இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும்.
மோட்டோரோலா ரேசர் ஆனது 16MP பின்புற f/1.7, 1.22um கேமிரா, டூயல் பிக்சல் ஆட்டோபோகஸ் (AF), லேசர் AF, கலர் கோரேலேட்டட் டெம்பரேச்சர் (CCT) மற்றும் இரட்டை LED ப்ளாஷ்கொண்டுள்ளது. செல்பிக்களுக்கு, இது உள்ளே 5MP செல்பி f/2.0, 1.12um கேமரா மற்றும் ஸ்கிரீன் பிளாஷ் கொண்டுள்ளது.
இந்த சாதனத்தில் என்எப்எச், புளூடூத் 5.0, யுஎஸ்பி டைப்-சி, ஸ்பிளாஸ் ப்ரூப் நீர் எதிர்ப்பு நானோகேட்டிங் ஆகியவற்றை கொண்டுள்ளது,
பின்பு மடிக்கக்கூடிய தடிமனான அடிதளத்தில் கைரேகை சென்சார் இடம்பெற்றுள்ளது. மேலும் 2510எம்ஏஎச் பேட்டரி மற்றும் 15வாட் பாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் இந்த சாதனம் வெளிவரும்.
சுருக்கமாக இதில் என்னென்ன அம்சங்கள் உள்ளது?
6.2' இன்ச் கொண்ட 2142 x 876 பிக்சல் உடைய OLED டிஸ்பிளே
2.7' இன்ச் கொண்ட 600 x 800 பிக்சல் உடைய OLED டிஸ்பிளே
ஆண்ட்ராய்டு 9 பை
அட்ரினோ 616 ஜி.பீ.
ஸ்னாப்டிராகன் 710 செயலி
6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்
16 மெகா பிக்சல் கொண்ட பின்பக்க கேமரா
5 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க செல்ஃபி கேமரா
15W டர்போ பூஸ்ட் சார்ஜிங்
2510 எம்.ஏ.எச் பேட்டரி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக