ரியல்மி நிறுவனம் ரியல்மி மோஷன் ஆக்டிவேட்டட் நைட் லைட் சாதனத்தை இந்தியச் சந்தையில் இன்று அறிமுகம் செய்கிறது. இந்த சாதனம் இன்று ரியல்மி நஸ்ரோ 30 உடன் பட்ஸ் ஏர் 2 இயர்பட்ஸ் சாதனத்துடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. மோஷன் சென்சார்கள் பொருத்தப்பட்ட இந்த சாதனம் எப்படிச் செயல்படுகிறது, என்ன விலையில் இது அறிமுகம் செய்யப்படுகிறது போண்டா போன்ற தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.
ரியல்மி மோஷன் ஆக்டிவேட்டட் நைட் லைட்
ரியல்மி மோஷன் ஆக்டிவேட்டட் நைட் லைட் சாதனம் 365 நாட்கள் நீடிக்கும் பேட்டரி ஆயுளுடன் வருகிறது. மோஷன் டிடெக்ஷன் சென்சார்கள் இதில் உள்ளதினால் ஆட்கள் நடமாட்டம் உள்ள போது ஆட்டோமேட்டிகாக ஆன் ஆகும் திறனைக் கொண்டுள்ளது. இது 2,800K டிப்யூஸ்ட் வாரம் லைட் அம்சத்துடனும் வருகிறது.
இன்ஃபிராரெட் (IR) மோஷன் சென்சார்
ரியல்மி மோஷன் ஆக்டிவேட் நைட் லைட் குறித்த முக்கிய விவரங்களை வெளியிடுவதற்கு முன்னதாக, ரியல்மி ஒரு பிரத்தியேக மைக்ரோசைட்டை உருவாக்கியுள்ளது. இந்த சாதனம் 120 டிகிரி பரப்பளவை உள்ளடக்கியதாகக் கூறப்படும் இன்ஃபிராரெட் (IR) மோஷன் சென்சார் கொண்ட வட்ட வடிவ மோஷன் ஆக்டிவேட் நைட் லைட்டைக் காட்டுகிறது.
ஆட்டோமேட்டிக் ஆஃப் அம்சம்
யாராவது இந்த சாதனம் உள்ள இடத்தை கடந்து சென்றால் அல்லது சாதனம் இருக்கும் இடத்தில் உள்ளே நுழைந்தவுடன் தானாகவே ஒளிரும் இயக்கத்தைக் கொண்டுள்ளது. ஆட்கள் நடமாட்டத்தைக் கண்டறிந்த அடுத்த 15 விநாடிகளுக்குப் பிறகு விளக்கு தானாகவே அணைந்துவிடும். அதாவது இதில் ஆட்டோமேட்டிக் ஆஃப் அம்சமும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இதில் ஒரு லைட் சென்சார் உள்ளது, இது விளக்குகளின் வெளிச்ச அளவை சரிசெய்யப் பயன்படுகிறது.
விலை என்ன இருக்கும்?
ரியல்மி மோஷன் ஆக்டிவேட் நைட் லைட் மூன்று AAA பேட்டரிகளின் சக்தி மூலமாகப் பயன்படுத்துகிறது. தொகுக்கப்பட்ட பேட்டரிகள் 365 நாட்கள் நீடிக்கும் என்று நிறுவனம் கூறுகிறது. ரியல்மி மோஷன் ஆக்டிவேட்டட் நைட் லைட்டின் விலை இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், இது ரூ. 1,000 என்ற விலைக்கு குறைவான விலையில் தான் இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக