-----------------------------------------------------------
கொஞ்சம் சிரிங்க பாஸ்...!!
-----------------------------------------------------------
பாபு : காஞ்சிபுரம் இட்லி கேட்டு 1 மணி நேரம் ஆகுது... இன்னும் வரலையே...
சர்வர் : காஞ்சிபுரம் என்ன பக்கத்துலயா இருக்கு.. உடனே கொண்டு வர.
பாபு : 😖😖
-----------------------------------------------------------
பணக்கார அப்பா : என் மகள் ஏழையாக இருந்திருந்தாலும் காதலித்து இருப்பாயா?
காதலன் : கண்டிப்பாக காதலித்திருப்பேன்!
பணக்கார அப்பா : அப்போ உன்னை மாதிரி முட்டாள் என் குடும்பத்திற்கு தேவையில்லை.
காதலன் : 😳😳
-----------------------------------------------------------
வார்த்தைகளை கண்டுபிடிங்க...!!
-----------------------------------------------------------
1. ச் ஆ ச ம் ய ன் தா ரி
2. ப கு யி ழ ன ங் டி ர்
3. ண தி வ ரு மா ன ர் ம
4. சா சி ன் ரி றோ ஆ ன்
5. பு கொ இ ணை ள் கை ப்
விடை :
1. ஆச்சரியம்தான்
2. பழங்குடியினர்
3. திருமணமானவர்
4. சான்றோரின் ஆசி
5. இணைப்பு கொள்கை
-----------------------------------------------------------
ஓரெழுத்து ஒருமொழி...!!
-----------------------------------------------------------
ஏ - அம்பு, இறுமாப்பு, சிவன், திருமால்
ஐ - ஐந்து, அழகு, தலைவன், வியப்பு, ஆசிரியர், அழகு, பருந்து
ஓ - வினா, மதகு (நீர் தாங்கும் பலகை), ஒளிவு
கா - சோலை, காத்தல், காகம், காவடி, பூந்தோட்டம், வலிமை
கூ - பூமி, கூவுதல், கூக்குரல், அழுக்கு, பிசாசு
-----------------------------------------------------------
குறளும்... பொருளும்...!!
-----------------------------------------------------------
பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல்.
பொருள் :
பிறனுடைய உரிமையாகிய மனைவியை விரும்பி நடக்கும் அறியாமை, உலகத்தில் அறமும் பொருளும் ஆராய்ந்து கண்டவரிடம் இல்லை.
ரிலாக்ஸ் ப்ளீஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக