வோடபோன் ஐடியா மிஞ்சியுள்ள தனது வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்வதற்காகப் பல புதிய திட்டங்களை நம்பமுடியாத விலையில், நம்பமுடியாத சில சலுகைகளுடன் வழங்கி வருகிறது. வோடபோன் ஐடியா தற்பொழுது மலிவு விலையில் வழங்கும் தினமும் 3 ஜிபி டேட்டா கிடைக்கும் திட்டங்களைப் பற்றித் தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். இத்துடன் தினமும் 4ஜிபி கிடைக்கும் திட்டங்களும் Vi நிறுவனத்திடம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வோடபோன் ஐடியா இப்போது தினசரி 3 ஜிபி டேட்டா நன்மையை ரூ. 249, ரூ. 399 மற்றும் ரூ. 599 ஆகிய மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களுடன் வழங்குகிறது. மூன்று திட்டங்களும் வழக்கமாக 1.5 ஜிபி தினசரி டேட்டா நன்மையுடன் வருகிறது. முன்னதாக, இதே திட்டங்கள் நிறுவனத்தின் டபுள் டேட்டா சலுகையின் ஒரு பகுதியாக இருந்தன, இருப்பினும், இந்த சலுகை இப்போது 2 ஜிபி தினசரி டேட்டா திட்டங்களிலும் செல்லுபடியாகிறது.
ரூ. 249 திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும், அதன்பின் ரூ. 399 திட்டம் மற்றும் ரூ. 599 திட்டங்கள் முறையே 56 நாட்கள் மற்றும் 84 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டியை வழங்குகிறது. ஹைதராபாத்தில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா வட்டம், பெங்களூரு நகரத்தில் (கர்நாடக வட்டம்) ஆகிய வட்டங்களில் இந்த திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.
ரூ. 299, ரூ. 449 மற்றும் ரூ. 699 ஆகிய மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களின் கீழ் பயனர்களுக்கு தினமும் 2ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது. இந்த திட்டங்களும் டபுள் டேட்டா நன்மையுடன் வருவதனால் பயனர்களுக்கு தினமும் 4 ஜிபி டேட்டா கிடைக்கிறது. மேலே குறிப்பிட்டுள்ள ஆறு திட்டங்களும் FUP வரம்பும் இல்லாமல் இந்தியாவிற்குள் அனைத்து நெட்வொர்க்குக்கும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை, தினமும் 100 SMS மற்றும் Vi Movies & TV சந்தா ஆகியவற்றை வழங்குகிறது.
வோடபோன் ஐடியா தான் இப்போது பல்துறை ப்ரீபெய்ட் திட்டங்கள் மற்றும் சலுகைகளைக் கொண்ட ஒரே தொலைத் தொடர்பு ஆபரேட்டராக இருக்கிறது. கடந்த வாரம், வோடபோன் ஐடியா நிறுவனம் 'பிங் ஆல் நைட்' என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த புதிய சலுகை படி, வாடிக்கையாளர்கள் காலை 12 மணி முதல் காலை 6 மணி வரை எந்த வரம்பும் இல்லாமல் வரம்பற்ற டேட்டாவை அனுபவிக்க முடியும். இது தவிர, Vi வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர் வசதியையும் உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக