Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 22 பிப்ரவரி, 2021

நேபாளத்தில் இருந்து இந்தியா கடத்தி வரப்படும் பெட்ரோல்... விலை எவ்ளோ சொன்ன நம்ப மாட்டீங்க...

நேபாளத்தில் இருந்து இந்தியா கடத்தி வரப்படும் பெட்ரோல்... விலை எவ்ளோ சொன்ன நம்ப மாட்டீங்க...

உள்ளூர் பங்க்கில் விற்பனைக்குக் கிடைப்பதைவிட மிக குறைந்த விலையில் பெட்ரோல் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

இன்றைய நிலவரப்படி சென்னையில் பெட்ரோல் ரூ. 92.59-க்கும், டீசல் விலை லிட்டர் ரூ. 85.98க்கும் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. விரைவில் இவற்றின் விலை சென்சுரியைத் தொட்டுவிடும் என்ற அச்சத்தில் மக்கள் ஆழ்ந்திருக்கின்றனர். ஆகையால், அனைத்து இல்லங்கள், டீ கடை பெஞ்ச், முடி திருத்தும் கடை என அனைத்து இடங்களிலும் சமீப காலமாக மலையளவு உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையுயர்வைப் பற்றியதாகவே இருக்கின்றது.

இவ்வாறு நாட்டின் பெருவாரியான பகுதிகளில் பெட்ரோல் ரூ. 90-க்கும் அதிகமான விலையில் விற்கப்பட்டு வருகின்ற வேலையில், இதைவிட ரூ. 22 குறைந்த விலையில் பெட்ரோல் விற்பனைக்குக் கிடைப்பது ஆச்சர்ய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுவும், நமது இந்தியாவில் இவ்விலையில் பெட்ரோல் விற்பனைக்குக் கிடைப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்த ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டிருக்கும் செய்தியில், நமது அண்டை மாநிலங்களில் ஒன்றான நேபாளத்தில் இருந்து பெட்ரோல் கடத்தி வரப்பட்டு, உள்ளூர் பெட்ரோல் பங்க்குகளைக் காட்டிலும் ரூ. 22 வரையிலான குறைந்த விலையில் விற்பனைச் செய்வதாக கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்தே சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றை நேபாளம் கொள்முதல் செய்து, அந்நாட்டில் விற்பனைச் செய்கின்றது. இருப்பினும், அந்நாட்டில் இந்தியாவைக் காட்டிலும் மிகக் குறைந்த விலையிலேயே பெட்ரோல், டீசல் விற்பனைச் செய்யப்படுகின்றன.

எனவேதான் மக்கள் சிலர் இரு நாடுகளுக்கும் இடையே இருக்கும் குறுக்கு வழிகளைப் பயன்படுத்திச் சென்று பெட்ரோலை நிரப்பிக் கொள்கின்றனர். மேலும், சிலர் நேபாளத்தில் இருந்து பெட்ரோலைக் கடத்தி வந்து மிக குறைந்த விலையில் விற்பனைச் செய்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறு, விற்பனைச் செய்யப்படும் பெட்ரோல் உள்ளூர் பங்க்குகளைக் காட்டிலும் ரூ. 22 வரை குறைந்த விலையில் கிடைக்கின்றது.

நாடு முழுவதும் மக்கள் எரிபொருள் விலையுயர்வால் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலையே ஒரு சிலரை இதுபோன்ற தவறான வழியை மேற்கொள்ள தொடங்கியிருக்கின்றது. பெட்ரோல், டீசல் மட்டுமின்றி வீட்டு சமையல் எரிவாயுவின் விலையும் ரூ. 50 வரை உயர்த்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

இதனால், இல்லதரசிகள் பெரும் வேதனைக்குள்ளாகியிருக்கின்றனர். கணவன்களுக்கு தெரியாமல் மசாலா டப்பாக்களுக்கு இனி ஒரு சில்லரையைக்கூட சேர்த்து வைக்க முடியாதுபோல, என ஒரு சிலர் வேதனைத் தெரிவித்து வருகின்றனர். தற்போது நேபாளத்தில் ரூ. 70.62 என்ற விலையிலேயே பெட்ரோல் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது.

இதனையே பிஹார், அராரிய மாவட்ட மக்கள், பெரிய அளவில் பாதுகாப்பு அதிகாரிகளின் கண்காணிப்பு  இல்லாத குறுக்கு வழிகளைப் பயன்படுத்தி கடத்தி வருகின்றனர். இதனால் உள்ளூர் பெட்ரோல் பங்க்குகளில் எரிபொருள் விற்பனை லேசாக டல் அடிக்க தொடங்கியிருக்கின்றது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக