Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 22 பிப்ரவரி, 2021

டிவிஎஸ் எக்ஸ்எல்-ஐ ஓரம்கட்ட அறிமுகமாகியது கோமகி கேட் மின்சார வாகனம்... இதோட விலை தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

 டிவிஎஸ் எக்ஸ்எல்-ஐ ஓரம்கட்ட அறிமுகமாகியது கோமகி கேட் மின்சார வாகனம்... இதோட விலைய கேட்ட ஆச்சரியப்படுவீங்க!

கோமகி நிறுவனம் அதன் சிஏடி மின்சார இருசக்கர வாகனத்தை நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

தலைநகர் டெல்லியை மையமாகக் கொண்டு இயங்கும் கோமகி நிறுவனம், மிகவும் சுறுசுறுப்புடன் மின் வாகன தயாரிப்புகளை நாட்டில் அறிமுகப்படுத்தி வருகின்றது. அந்தவகையில், மிக சமீபத்தில் கோமிக டிஎன்95, கோமகி எஸ்இ மற்றும் கோமகி எம்5 ஆகிய இரு சக்கர மின்சார வாகனங்களை நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

இந்த நிலையில், புதிய எக்ஸ்ஜிடி சிஏடி 2.0 மின்சார இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியிருக்கின்றது. இது ஓர் லோடு வாகனம் ஆகும். அதிக எடைக் கொண்ட சரக்குகளை ஏற்றிச் செல்லக்கூடிய வர்த்தக ரீதியாக பயன்படக்கூடிய வாகனம் இதுவாகும்.

அந்தவகையில், சுமார் 300 முதல் 350 கிலோ வரையிலான சரக்குகளை இந்த வாகனத்தின்மூலம் ஏற்றிச் செல்ல முடியும் என நிறுவனம் கூறுகின்றது. இவ்வாகனத்தை இரு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்கு வழங்க இருப்பதாக கோமகி தெரிவித்திருக்கின்றது. ஜெல் 72V 42Ah, லி-அயன் 72V30Ah ஆகிய பேட்டரி திறன்கள் அடிப்படையிலேயே அத்தேர்வுகள் அமைய இருக்கின்றன.

இதில், ஜெல் பேட்டரி வேரியண்டிற்கு ரூ. 75 ஆயிரம் என்ற தொகையையும், லி-அயன் வேரியண்டிற்கு ரூ. 85 ஆயிரம் என்ற தொகையையும் கோமகி நிர்ணயித்துள்ளது. இந்த மலிவான விலைகளிலேயே கோமகி எக்ஸ்ஜிடி 2.0 விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது.


ஒரு முறை சார்ஜ் செய்தால் எத்தனை கிமீ பயணிக்கலாம்?

கோமகி நிறுவனத்தின் இந்த புதுமுக வெளியீடு விலையில் மட்டுமின்றி பிற திறன்களிலும் வியப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. இதற்கு மிக சிறந்த உதாரணமே இதனை அதிக எடை தாங்கும் வசதி இருக்கின்றது. இதேபோன்று, இது வழங்கும் ரேஞ்ஜ் திறனும் இருக்கின்றது.

ஓர் முழுமையான சார்ஜில் 125 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். மேலும், இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 25 கிமீ முதல் 30 கிமீ ஆகும். இதுதவிர, சிறந்த பிரேக்கிங் திறனுக்காக ட்யூவல் டிஸ்க் பிரேக்கிங் சிஸ்டம், 6 ஸ்பிரிங் அசிஸ்டட் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர், 12 இன்சிலான ட்யூப்லெஸ் டயர், சைடு ஸ்டாண்ட் மவுண்டட் ஃபூட் ரெஸ்ட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் உள்ளிட்ட சிறப்பம்சங்களும் இந்த வாகனத்தில் இடம் பெற்றிருக்கின்றன.

இத்தகைய சிறப்பம்சங்கள்கொண்ட வாகனத்தை கோமகி நிறுவனம் தற்போது மிக குறைந்த விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது டிவிஎஸ் எக்ஸ்எல் போன்ற சரக்கு வாகனங்களின் இடத்தை நிரப்பு உதவும்.


2 கருத்துகள்: