Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 1 பிப்ரவரி, 2021

முயலும் போது உங்களை முட்களும் முத்தமிடும்... இந்த டவுட் உங்களுக்கும் இருக்கா? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

------------------------------------------

சிதறடிக்கும் ஜோக்ஸ்...!!

-------------------------------------------

மாலினி : என் காதலர் என்ன ஏமாத்திருவாரோன்னு பயமா இருக்கு.

ஷாலினி : ஏன்?

மாலினி : பீச்சுக்கு வரும்போதெல்லாம் அல்வா வாங்கிட்டு வர்றாரு.

ஷாலினி : 😄😄

-------------------------------------------

அமலா : சண்டை போட்டுட்டு ரொம்ப நாளா பேசாம இருந்த பக்கத்து வீட்டு கங்காவையும், எதிர் வீட்டு காவேரியையும் என் மருமக சமாதானம் பண்ணி பேச வெச்சுட்டா.

விமலா : அதுக்கென்ன?

அமலா : கங்கா - காவேரிய இணைச்சுட்டதா பெருமையா பேசிக்கிறா.

விமலா : 😉😉

-------------------------------------------

மாவட்டங்களும்... சிறப்பு பெயர்களும்...!!

-------------------------------------------

1. இராமநாதபுரம் - புனித பூமி🌎

2. ஈரோடு - மஞ்சள் நகரம்🌱

3. கரூர் - நெசவாளர்களின் வீடு🏠

4. கன்னியாகுமரி - இந்தியாவின் தென்நிலை எல்லை🗾

5. காஞ்சிபுரம் - ஆலைய நகரம், ஏரி மாவட்டம்🏰

-------------------------------------------

தன்னம்பிக்கை வரிகள்...!!

-------------------------------------------

💥 சில தருணங்களில் பலமாகவும், சில தருணங்களில் பலவீனமாகவும் அமைந்து விடுகிறது.. பிறர் மேல் நாம் வைக்கும் நம்பிக்கை. 

💥 வெற்றிக்காக நீங்கள் உழைக்கும் தொடர் முயற்சியில் உள்ளது உங்களின் ஆத்ம திருப்தி. 

💥 ஆறு, பாறைகளுக்குள் நுழைந்து பயணிக்கிறது அது பலத்தினால் அல்ல, விடாமுயற்சியால். 

💥 முயற்சி செய்ய தயங்காதீர்கள், முயலும்போது உங்களை முட்களும் முத்தமிடும்.

-------------------------------------------

இந்த டவுட் உங்களுக்கும் இருக்கா?

-------------------------------------------

அடுத்தவங்க எழுதின புத்தகத்தை பார்த்து பாடம் நடத்துறாங்க... அது தப்பில்லையாம்...

நாம அடுத்தவனை பார்த்து எழுதினா அது தப்பாமா...😏

-------------------------------------------

ஓரெழுத்து ஒருமொழி...!!

-------------------------------------------

சோ - மதில், பாதுகாப்பு, ஒலி, அரசன்

தா - கொடு, கேட்பது, அழிவு, குற்றம், பகை, நான்முகன்

தீ - நெருப்பு, அறிவு, இனிமை, சினம், நஞ்சு

து - கெடு, உண், பிரிவு, உணவு, பறவையின் இறகு

தூ - வெண்மை, தூய்மை, சதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக