---------------------------------------------------
கொஞ்சம் சிரிங்க பாஸ்...!!
---------------------------------------------------
அமலா : பத்திரிக்கை ஆசிரியருக்கு காதல் கடிதம் அனுப்பியது தப்பாப்போச்சு.
விமலா : ஏன்?
அமலா : பத்திரிக்கையில பிரசுரம் பண்ணிட்டு, சன்மானம் அனுப்பிட்டார்.
விமலா : 😛😛
---------------------------------------------------
கீதா : என் புருஷனுக்கு ரொம்ப நல்ல மனசு.
சீதா : எத வெச்சு சொல்ற?
கீதா : சமையல் செய்றதுமில்லாம எனக்கு ஊட்டியும் விடுவாரே, அத வெச்சு தான்.
சீதா : 😁😁
---------------------------------------------------
வார்த்தை விளையாட்டு...!!
---------------------------------------------------
கீழ்க்கண்ட வார்த்தைகளில் விடுபட்ட எழுத்தை கண்டுபிடிக்கவும்...!!
(குறிப்பு : அனைத்து சொற்களுக்கும் விடை ஒரே எழுத்து)
1. ப _ கு
2. மு _ ம்
3. க _ மை
4. கி _ ங்கு
விடை கீழே...👇👇
---------------------------------------------------
மாமனாரின் அன்பு பரிசு.. இது சிரிப்பதற்கு மட்டுமே..!!
---------------------------------------------------
ஒரு பணக்கார மாமியாருக்கு 3 மருமகன்கள்.. அவளுக்கு மருமகன்கள் எல்லாம் தன் மேல் எவ்வளவு அன்பா இருக்காங்கன்னு தெரிஞ்சிக்க ஆசையா இருந்தது..
ஒரு நாள் மூத்த மருமகனை அழைச்சுக்கிட்டு படகு பிரயாணம் போனாள்.. நடுவழியிலே தண்ணிக்குள் தற்செயலா விழுந்தது போல விழ, மருமகன் பாய்ஞ்சு காப்பாத்திட்டாரு.
மறுநாள் அவர் வீட்டு வாசல்ல ஒரு புத்தம் புது மாருதி கார் நின்னுகிட்டுருந்தது.. அதன் கண்ணாடியில் ஒரு அட்டை ஒட்டப்பட்டிருந்தது.. 'மாமியாரின் அன்பு பரிசு" என்று..
ரெண்டாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது.. அவரும் ஒரு மாருதி கார் வென்றார். 'மாமியாரின் அன்பு பரிசுhக".
மூன்றாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது.. அவர் கடைசி வரை காப்பாத்தவே இல்ல.. மாமியார் கடைசியா பரிதாபமா 'லுக்கு" உட்டப்ப சொன்னான்.. 'போய்த் தொலை.. எனக்கு காரும் வேணாம் ஒன்னும் வேணாம்.. சாவுற வரைக்கும் சைக்கிள்ல போயிக்கிறேன்.. பொண்ணா வளத்து வெச்சிருக்க..?"
மறுநாள் அவன் வீட்டு வாசல்ல ஒரு பளபளக்கும் ஃபாரின் கார் நின்னுச்சு.. 'மாமனாரின் அன்பு பரிசு" என்ற அட்டையுடன்...!
விடை :
1. படகு
2. முடம்
3. கடமை
4. கிடங்கு
ரிலாக்ஸ் ப்ளீஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக