
இப்போது வரும் புதிய புதிய தொழில்நுட்பங்கள் நமக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்த டிஜிட்டல் தொழில்நுட்பம் ஆனது பல்வேறு மாற்றங்களை செய்துவிட்டது. அந்த வகையில் இதே தொழில்நுட்ப உதவியினால் தென்கொரியாவில் ஒரு நெகிழ்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது.
விர்ச்சுவல் ரியாலிட்டி
அதாவது தென்கொரியா நாட்டில் வசித்து வரும் கிம் கிம் ஜாங்-சூ என்பவர் விர்ச்சுவல் ரியாலிட்டியின் மூலமாக இறந்து போன தன்
மனைவியை சந்தித்துள்ளார். மேலும் இந்த அசத்தலான தொழில்நுட்பத்தின் துணையோடு உயிர்நீத்த தன் மனைவியின் கரங்களையும் அவர் பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொலைகாட்சி நிகழ்ச்சி
குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் அந்த நாட்டின் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஆவணப்படங்கள் ஒளிபரப்பாகி வருகிறது. உயிர்நீத்த தங்கள் அன்புக்குரியவர்களை மீண்டும் சந்திக்க சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்திற்கு விர்ச்சுவல் ரியாலிட்டியின் மூலமாகவழி செய்கிறது அந்த நிகழ்ச்சி.
ஆவணப்படத்தை பார்த்த எல்லோரது மனதையும் உருக செய்துள்ளது
அதன்படி அந்த ஆவணப்படத்தின் உதவியுடன், நாள்பட்ட நோயினால் உயிர்நீத்த தன் மனைவியை சந்தித்துள்ளார் கிம் ஜாங்-சூ. அவரை பார்த்ததும் அவர் கண்களில் நீர் ததும்பியுள்ளது. பின்பு அவரது உருக்கம் இந்த ஆவணப்படத்தை பார்த்த எல்லோரது மனதையும் உருக செய்துள்ளது.
கிம் நடனமும் தன் மனைவியுடன் ஆடியுள்ளார்
குறிப்பாக இந்த ஆவணப்படத்தை தயாரிக்க சுமார் ஆறு மாதம் காலம் தேவைப்பட்டதாக சொல்கிறது அந்த படக்குழு. மேலும் அந்த ஆவணப்படத்தில் விர்ச்சுவல் ரியாலிட்டியின் துணையோடு கிம் நடனமும் தன் மனைவியுடன் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர்களது இரண்டாவது மகள் ஜாங்-யன் கூறியது என்னவென்றால், அப்பா எப்போதுமே அம்மாவுக்கு தன் அன்பை முத்தங்கள மூலமாக வெளிப்படுத்துவார். அம்மா நோய் பாதிப்புக்கு ஆனான போதும் அம்மாவை மிகுந்த அக்கறையுடன் பார்த்துக் கொண்டார்.
8 லட்சம் வியூஸ்களை கடந்துள்ளது
பின்பு அம்மாவின் முடியெல்லாம் கொட்டிய போதும் கூட அழகி என சொல்வார் அப்பா என்று கூறியுள்ளார் மகள் ஜாங். தற்சமயம் இந்த வீடியோ யூடியூப் தளத்தில் மட்டும் 8 லட்சம் வியூஸ்களை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக