-------------------------------------------------------------
சிதறடிக்கும் ஜோக்ஸ்...!!
-------------------------------------------------------------
ஆசிரியர் : நான் உனக்கு முதலில் இரண்டு கோழி தர்றேன்.. அடுத்து இரண்டு கோழி தர்றேன். இப்ப உன்கிட்ட எத்தனை கோழி இருக்கும்.?
மாணவன் : 5 இருக்கும் சார்...
ஆசிரியர் : டேய்... நல்லா கேளு முதல்ல இரண்டு கோழி தர்றேன்.. மறுபடியும் இரண்டு கோழி தர்றேன்.. இப்ப நல்லா கூட்டி சொல்லு.. உன்கிட்டே எவ்வளவு கோழி இருக்கும்?
மாணவன் : 5 தான் சார்..!
ஆசிரியர் : உஷ்.. முடியலடா சாமி... சரி இதுக்கு பதில் சொல்லு... முதல்ல இரண்டு ஆப்பிள் தர்றேன்... அடுத்து இரண்டு ஆப்பிள் தர்றேன்.. மொத்தம் எத்தனை ஆப்பிள் இருக்கும்..?
மணவன் : 4 சார்..!
ஆசிரியர் : தப்பிச்சேன்... இப்போ கோழிக்கு வருவோம்.. 2 கோழி தர்றேன்... பிறகு மறுபடியும் 2 கோழி தர்றேன்.. இப்போ உன்கிட்டே மொத்தம் எத்தனை கோழி இருக்கும்..?
மாணவன் : 5 சார்...
ஆசிரியர் : அடேய்... லூசுப்பயலே... எப்படிடா 5 கோழி வரும்..?
மாணவன் : சார்.. என்கிட்டே ஏற்கனவே வீட்டில் ஒரு கோழி இருக்கு சார்..
ஆசிரியர் : 😧😧
-------------------------------------------------------------
-------------------------------------------------------------
இன்றைய கடி..!!
-------------------------------------------------------------
வாழைக்கும், சாலைக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன?
.
.
.
.
.
இரண்டிலும் 'தார்" இருக்கும்.
கோடீஸ்வரன் ஒருவன் பிச்சையெடுத்தான். எப்படி?
.
.
.
.
.
பிச்சைக்காரன் பெயர் கோடீஸ்வரன்.
வீட்டுக்குள் போவதற்கும், வெளிநாடு போவதற்கும் உள்ள தலைகீழ் வித்தியாசம் என்ன?
.
.
.
.
.
வீட்டுக்குள் போவதற்கு 'சாவி" வேண்டும்.
வெளிநாடு போவதற்கு 'விசா" வேண்டும்.
ரிலாக்ஸ் ப்ளீஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக