---------------------------------------------------
கலக்கலான ஜோக்ஸ்...!!
---------------------------------------------------
கணவன் : நீ சிரிச்சா பசியே எடுக்கமாட்டிங்கிது செல்லம்.
மனைவி : இப்படி சொல்லி நீங்க தப்பிக்க முடியாது. இந்த உப்புமாவை நீங்கதான் சாப்பிடணும்.
கணவன் : 😣😣
---------------------------------------------------
நீதிபதி : ஒரு மாசமா ஜெயில்ல இருந்தியே.. என்னென்ன கத்துக்கிட்ட?
குற்றவாளி : சுவரை தாண்டுறது.. கம்பியை வளைக்கிறது, சுரங்கம் தோண்டுறதுன்னு இப்படி நிறைய கத்துக்கிட்டேன் ஐயா.
நீதிபதி : 😳😳
---------------------------------------------------
டங்க் டுவிஸ்டர்..!!
---------------------------------------------------
தள தள மாமியின் வழ கொழ பேச்சைக் கேட்டு தட புடலாய் செலவு செய்து வழக்கத்துக்கு மாறான பழக்கத்தைப் புழக்கத்தில் கொண்டு வாழும் வாழ்க்கை வழுவியும் வேண்டாமே.
குட்டக் குட்டக் குனியாதே, கட்டுப் பட்டுத் தொலையாதே. திட்ட வட்ட நெஞ்சுடனே விட்டுக் கொடுத்து வாழ்ந்து வெட்ட வெட்டத் துளிர்த்திடு.
---------------------------------------------------
உடலுக்கு உறுதி தரும் பிரண்டை...!!
---------------------------------------------------
உடலுக்கு உறுதி தருவதில் பிரண்டை முக்கிய பங்கு வகிக்கிறது. எழும்பு முறிவு உள்ளவர்கள், எழும்பு பலவீனமானவர்கள் பிரண்டையை தொடர்ந்து பயன்படுத்தலாம்.
வாய்வு பிடிப்பு, கை, கால் குடைச்சல் இருப்பவர்களுக்கு பிரண்டை சிறந்த மருந்தாக உள்ளது.
வயிற்று பொருமல் ஏற்படும்போது பிரண்டையுடன் மிளகு தட்டி சூப்பு செய்து சூடாக குடித்தால் நல்ல பலன் கிடைக்கும். வாரம் இரண்டு முறை பிரண்டை துவையல் செய்து சாப்பிடலாம்.
---------------------------------------------------
பழமொழியும்... விளக்கமும்...!!
---------------------------------------------------
கப்பல் கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே.
விளக்கம் :
'கன்னமிடுதல்" என்றால் திருடுதல் என்று பொருள். ஒருவேளை கப்பலே கவிழ்ந்து செல்வத்தை எல்லாம் இழந்து வறுமையில் வாடும் நிலை வந்தாலும், திருடும் எண்ணம் வரக்கூடாது என்பதுதான் இந்தப் பழமொழியில் மறைந்திருக்கும் உண்மையான செய்தி.
ரிலாக்ஸ் ப்ளீஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக