
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது என்று தான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது என்றுதான் கூறவேண்டும்.
இந்நிலையில் வயர்லெஸ் ஹெட்செட் மாடல் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம். குறிப்பாக இந்த வயர்லெஸ் ஹெட்செட் எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எக்ஸ், சீரிஸ் எஸ், எக்ஸ்பாக்ஸ் ஒன் மற்றும் இதர விண்டோஸ் 10 சாதனங்களுடன் இணைந்து செயல்படுகிறது.
20Hz முதல் 20000Hz ரெஸ்பான்ஸ் ரேன்ஜ்
மேலும் இந்த புதிய எக்ஸ்பாக்ஸ் வயர்லெஸ் ஹெட்செட் பிளெயின் பிளாக் பினிஷ் நிறத்தில், கேமிங் சார்ந்த அம்சங்களை கொண்டுள்ளது. பின்பு இது 40எம்எம் டிரைவர்கள், பேப்பர் கம்போசிட் டையபிராம் மற்றும் நியோடிமியம் மேக்னெட் கொண்டு உருவாக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக இது 20Hz முதல் 20000Hz ரெஸ்பான்ஸ் ரேன்ஜ் கொண்டிருக்கிறது.
அதேபோல் இந்த புதிய ஹெட்செட் பவர்ஃபேர் பட்டன், இடது மற்றும் வலதுபுற இயர்கப் மீது டையல்கள் வழங்கப்பட்டுள்ளன. பின்பு வலதுபுற டையல் வால்யூம் கண்ட்ரோலர்களாக இயங்குகின்றன.
பின்பு இதில் உள்ள மைக் ட்விஸ்ட் செய்யக்கூடிய பூம் வடிவமைப்பு கொண்டுள்ளது. இதனால் பயன்படுத்தாத நேரத்தில் அதனை ஓரமாக வைத்துக் கொள்ளலாம். மேலும் இந்த புதிய எக்ஸ்பாக்ஸ் வயர்லெஸ் ஹெட்செட் ப்ளூடூத் 4.2 மூலம் விண்டோஸ் 10 சாதனங்களுடன் இணைந்து கொள்கிறது. இதுதவிர யுஎஸ்பி டைப் சி கேபிள் அல்லது எக்ஸ்பாக்ஸ் வயர்லெஸ் கொண்டும் பயன்படுத்தலாம். யுஎஸ்பி டைப் சி போர்ட் கொண்டு ஹெட்செட் சார்ஜ் செய்துகொள்ளலாம்.
15 மணி நேர பேக்கப்
இந்த எக்ஸ்பாக்ஸ் வயர்லெஸ் ஹெட்செட் 15 மணி நேர பேக்கப் வழங்கும் பேட்டரி வசதியை கொண்டுள்ளது. இதனை 30 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் சுமார் நான்கு மணி நேரத்திற்கான பேக்கப் பெற முடியும். அதேபோல் இந்த சாதனத்தை முழுமையாக சார்ஜ் செய்ய மூன்று மணி நேரங்கள் ஆகும். இந்த சாதனத்தின் விலை 99 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ.7300 ஆக உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக