Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 22 பிப்ரவரி, 2021

டைமிங் சென்ஸ் என்றால் என்ன? இது சிரிப்பதற்கு மட்டுமே... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

------------------------------------------------------

நகைச்சுவை துளிகள்..!!!

------------------------------------------------------

ராமு : டைமிங் சென்ஸ் என்றால் என்ன?

சோமு : நரைக்க ஆரம்பிச்சதுமே தலைக்கு டை அடிக்கப் பழகுறதுதான்...

ராமு : 😅😅

------------------------------------------------------

பாலு : உன் மனைவியை நீ அடிக்கறது உண்டா?

தமிழ் : சே... சே... திட்டறதோட சரி... அடிக்கிறதெல்லாம் அவதான்..

பாலு : 😂😂

------------------------------------------------------

அடைப்புக்குள் கொடுத்துள்ள குறிப்புகளைக் கொண்டு விடைகளை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்...!!

------------------------------------------------------

1. _மி_க_ம் (கடலில் வாழும் உயிரினம்)

2. க_ணா_ (உள்ளதைக் காட்டும்)

3. _ட்_யா_ம் (அணிகலன்)

4. _ண்_ன் (கண் சிமிட்டும்)

5. ம_ங்_த்_ (பறவை)

விடை கீழே...

------------------------------------------------------

தாமரை...!!

'தாமரை"யில் 'தா" என்னும்

எழுத்தை நீக்கு - அங்கே

'மரை" என்ற மானின் பெயர்

துள்ளி ஓடும்!

'மரை" என்ற இரு எழுத்தை மறைத்து விட்டால்

'தா" என்ற ஓரெழுத்துதானே மிஞ்சும் - அது

'கொடு" என்றே

உனைப் பார்த்து கொடுக்கச் சொல்லும்!

தாமரையில் நடு 'ம" வை

நீக்கிப் பார்த்தால் - அழுவோர்

கண்களிலே கண்ணீர்தான்

'தாரை" வார்க்கும்!

------------------------------------------------------

விடைகள் :

------------------------------------------------------

1. திமிங்கலம்

2. கண்ணாடி

3. ஒட்டியாணம்

4. விண்மீன்

5. மரங்கொத்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக