Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 4 பிப்ரவரி, 2021

என்ன செய்வது? திகைத்த டாக்டர்... யோசனை கூறிய நோயாளி... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

-----------------------------------------------------

கொஞ்சம் சிரிங்க பாஸ்...!!

-----------------------------------------------------

செந்தில் : அண்ணே! வாழ்க்கை ஒரு வட்டம்.

கவுண்டமணி : எப்படிடா கண்டுபிடிச்ச?

செந்தில் : என் வாழ்க்கைல ரொம்ப பிடிச்சது இட்லியும், தோசையும்தான். இரண்டுமே வட்டம்...

கவுண்டமணி : 😬😬

-----------------------------------------------------

ஷாலினி : வாசல்ல நின்னுக்கிட்டுதான் என் மாமியார் என்கூட சண்ட போடுவாங்க.

மாலினி : ஏன்?

ஷாலினி : அப்பதான் ஜெயிக்க முடியும்னு அவுங்களுக்கு வாஸ்து சாஸ்திரத்துல சொன்னாங்களாம்.

மாலினி : 😛😛

-----------------------------------------------------

சிறந்த வரிகள்...!!

-----------------------------------------------------

எந்த செயலையும் எதற்காக செய்கிறோம் என்ற வலுவான காரணம் இருக்க வேண்டும்...

உங்களை பற்றிய எண்ணத்தை மேம்படுத்துங்கள்...

உங்களை சுற்றியுள்ள விஷயங்களை பற்றிய விழிப்புணர்வு வேண்டும்...

மற்றவர்கள் சிந்தித்த பாதையில் சிந்திக்காதீர்கள்...

சிறந்த மனிதர்கள் சூழ வாழுங்கள்...

அவர்களின் பழக்கமே உங்களை வழிநடத்துங்கள்...!!

-----------------------------------------------------

குட்டிக்கதை...!!

-----------------------------------------------------

மனநல மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர், வெளியில் வந்து பார்த்தபோது, தன் காரின் ஒரு டயர் காற்றுப் போய் இருப்பதை கண்டார். 

டயரை கழற்றியபோது, அதன் நட்டுகள் சாக்கடையில் விழுந்துவிட்டன. அதனால், என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து கொண்டிருந்தார்.

ஒரு நோயாளி அருகில் வந்து, புதிய டயரை மாட்டி, மற்ற சக்கரங்களில் இருந்து ஒவ்வொரு நட்டைக் கழற்றி, இதில் போட்டு விடுங்கள். அப்புறம் பழுது பார்க்கும் இடம் சென்று சரி செய்து கொள்ளலாம். அதுவரை தாங்கும் என்றான்.

டாக்டர் மகிழ்ச்சியடைந்து, அருமையான யோசனை, நீ இங்க என்ன செய்து கொண்டிருக்கிறாய்? என்று கேட்டார்.

'நான் பைத்தியக்காரன்... ஆனால் முட்டாளில்லை" என்றான் அவன்...!!😌😌

-----------------------------------------------------

அட அப்படியா...!!

-----------------------------------------------------

தமிழகத்தின் மிக பழமையான அணைக்கட்டு - கல்லணை.

அதிகமான ஏரிகள் கொண்ட மாவட்டம் - காஞ்சிபுரம்.

தமிழகத்தின் மிக உயர்ந்த சிகரம் - தொட்டபெட்டா.

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் - தஞ்சாவூர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக