👉 மிதுன ராசியின் அதிபதி புதன் பகவான் ஆவார். புதன் பகவானுடன் கேது நட்பு என்ற நிலையில் இருந்து செய்யும் சுப மற்றும் அசுப பலன்களை பற்றி காண்போம்.
👉 எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்கக்கூடியவர்கள்.
👉 முகமலர்ச்சியுடன், வசீகரமான புன்முறுவலுடன் காணப்படக்கூடியவர்கள்.
👉 ஒரே செயலில் இருவிதமான இலாபம் அடையக்கூடியவர்கள்.
👉 எந்த செயலிலும் ஆதாயம் இருந்தால் முழு கவனத்துடன் ஈடுபடக்கூடியவர்கள்.
👉 பொய்யை மெய்யாக பேசும் குணம் கொண்டவர்கள்.
👉 சாதுர்யமான செயல்பாடுகளை கொண்டவர்கள்.
👉 இவர்களை புரிந்து கொள்வது சற்று விசித்திரமானது.
👉 ஆடை, அலங்காரங்களில் விருப்பமுடையவர்கள்.
👉 தனக்கு தீங்கு இழைத்தவர்களுக்கு தகுந்த நேரத்தில் பாடம் கற்பிக்கக்கூடியவர்கள்.
👉 எதிலும் புதியதை தேடக்கூடியவர்கள்.
👉 எதிலும் முடிவு என்பதை விரும்பாதவர்கள்.
👉 மறைமுகமான செயல்பாடுகளை கொண்டவர்கள்.
👉 வெளிவட்டார தொடர்புகளை அதிகம் விரும்புபவர்கள்.
👉 எதிலும் ரசனையுடன் செயல்படக்கூடியவர்கள்.
👉 சுயநலத்தின் அடிப்படையில் பொதுநல செயல்பாடுகளை செய்யக்கூடியவர்கள்.
👉 தனது எண்ணங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்பாதவர்கள்.
ஆன்மிகமும் - ஜோதிடமும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக