ராவணனை ராமன் கொன்றதற்கு, சீதையின் மேல் ராவணன் ஆசை கொண்டது மட்டும்தான் காரணமா?... அதற்கு உண்மையான காரணம் தான் என்ன என்பது பற்றி பார்ப்போம்.
பெரும் வீரன்
ராவணன் பத்து தலைகள் கொண்ட, அதிவீரம் படைத்தவன் என்பது இலங்கையை ஆண்டவன் என்பதும் நமக்குத் தெரிந்ததே. ராவணன் என்றால் அதிவீரன். சீதை மீது ஆசைப்பட்டதால் ராமனால் கொல்லப்பட்டான் என்று தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
அரக்க குணம் நற்குணமும்
ஆனால் ராவணனைப் பற்றியும்
அவனுடைய மரணத்தின் பின்னால் இருக்கும் சில உண்மைகளையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
ராவணன் அரக்கத் தனம் கொண்ட வீரன் மட்டுமல்ல. அவனிடம் வியந்து பார்க்கும் அளவுக்கு நிறைய
நற்குணங்களும் இருந்தன.
இசை வல்லுநர்
ராவணன் மிகச்சிறந்த இசை
வல்லுநர். அவனைப் போல் இந்த உலகில் வீணையை மீட்டுவதற்கு ஆளே கிடையாதாம். இதற்காக ராவண
வீணா என ஒரு கருவியையே உருவாக்கியிருக்கிறார். அந்த கருவியின் மூலம் சிவ தாண்டவத்தின்
சில பாடல்களையும் வாசித்திருக்கிறார்.
தீவிரை சிவ பக்தன்
ராவணன் ஒரு தீவிர சிவ பக்தன். தன்னுடைய வீணை மீட்கும் அசாத்திய ஞானத்தால் சிவனையே அசத்தியவர்.
சிவனுக்காக தன்னுடைய நரம்புகளையே கம்பிகளாகக் கொண்டு இசை மீட்டியிருக்கிறார்.
சிவன் தந்த வரம்
ராவணனின் இந்த இசையில் மயங்கிய சிவபெருமான், உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்று
ராவணனிடம் சிவபெருமான் கேட்டாராம். உடனே ராவணன் கேட்ட வரம் என்ன தெரியுமா?...
சாகாவரம்
இதுதான் சமயம். இந்த சமயத்தில் தான் சிவனிடம் எப்படியாவது சாகா வரத்தைப் பெற்றுவிட
வேண்டும். தான் மிகப்பெரிய பலசாலி. அதனால் தன்னை சாதாரணமனவர்களால் கொள்ள முடியாது,
அதனால் எப்படியும் தெய்வம் மற்றும் தேவர்களால் தான் கொல்லப்பட அதிக வாய்ப்பு இருப்பதால்,
கடவுள், தேவர்கள், அசுரர்கள், விலங்குகள் மற்றும் கடவுள் அவதாரங்கள் ஆகியவர்களால் தான்
கொல்லப்படக்கூடாது என்று சாகா வரத்தையே சூசகமாகக் கேட்டார். சிவபெருமானும் ராவணன் கேட்டபடியே
அந்த வரத்தை அவருக்குக் கொடுத்துவிட்டார்.
வரத்தில் பிழை
தான் சாகா வரம் பெற்றுவிட்டோம். சிவனே நினைத்தாலும் தன்னைக் கொல்ல முடியாது என்ற ஆணவத்தால்
தனக்கு தோன்றியதெல்லாம் செய்து வநதார் ராவணன். பல தீய செயல்களால் செய்து வந்தார். ஆனால்
ராவணன் ஒரு விஷயத்தை மறந்து விட்டார். எல்லோரையும் குறிப்பிட்டு வரம் கேட்ட அவர், மனிதர்களால்
தன்னைக் கொல்ல முடியாது என்று அவர் கேட்கத் தவறிவிட்டார்.
ராம அவதாரம்
அந்த சமயத்தில் தான் விஷ்ணு, ராம அவதாரம் தரித்து பூமியில் சாதாரண மனிதனாகப் பிறப்பெடுத்து,
தர்மததையும் நீதியையும் உலகத்தில் பரப்பி வந்தார். ராமனைப் பற்றி நம் எல்லோருக்குமே
தெரியும். அது உலகம் முழுவதும் உள்ள அதர்மத்தை அழித்து ததுமத்தை நிலைநாட்டுவதற்காக
எடுக்கப்பட்ட அவதாரமாகவே ராம அவதாரம் இருக்கிறது.
சீதை கடத்தல்
அந்த சமயத்தில் தான் தன்னுடைய ஆணவத்தால் அடுத்தவரின் மனைவி என்று கூ பார்க்காமல் சீதையின்
மேல் ராவணன் ஆசை கொண்டு, அவரைக் கைப்பற்ற நினைத்து இலங்கைக்குக் கடத்திச் சென்றான்.
ராவண வதம்
மனிதனால் தன்னை என்ன செய்ய முடியும்? என்ற ஆணவத்தால் அந்த வரத்தைக் கேட்கத் தவறியதால்
ராமனின் கையால் ராவணன் கொல்லப்பட்டார். அதுவும் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவதற்காக
நடந்த ஒரு போர். அதற்கு சீதை ஒரு கருவி. அப்படி தான் ராமன் ராவணனைக் கொன்று, உலகத்துக்கு
நீதியைச் சுட்டிக் காட்டியதோடு தர்மத்தையும் நிலைநாட்டினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக