ஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தின் நோக்கியா ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்ப்பு உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஸ்மார்ட்போன்கள் தனித்துவமான அம்சங்களை கொண்டுள்ளன. இந்நிலையில் ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் தனது புதிய நோக்கியா பவர் இயர்பட்ஸ் லைட் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
குறிப்பாக இந்த புதிய நோக்கியா பவர் இயர்பட்ஸ் லைட் மாடல் ஆனது ஐபிஎக்ஸ்7 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் மற்றும் ப்ளூடூத் 5 வசதிகளை
கொண்டுள்ளது. மேலும் இந்த சாதனம் 600 எம்ஏஎச் போர்டபில் சார்ஜிங் கேஸ் வசதியுடன் வெளிவந்துள்ளது.
போர்டபில் சார்ஜிங் கேஸ்
மேலும் இந்த போர்டபில் சார்ஜிங் கேஸ் ஆனது கூடுதலாக 6 முறை சார்ஜ் செய்யும் திறன் கொண்டிருக்கிறது. பின்பு இந்த இயர்பட்ஸ் மொத்தத்தில் 35 மணி நேர பிளேபேக் வழங்கும் அம்சத்துடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்
நோக்கியா பவர் இயர்பட்ஸ் லைட் மாடலில் 6எம்எம் கிராபின் டிரைவர்களுடன் உயர் ரக ஆடியோ வசதி உள்ளது. எனவே இது சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி
அதேபோல் இந்த சாதனத்தில் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி மற்றும் டச் கண்ட்ரோல் அம்சமும் உள்ளது. மேலும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி இவற்றுள் இருப்பதால் பாதுகாப்புடன் பயன்படுத்த முடியும்.
யுஎஸ்பி டைப் சி
நோக்கியா பவர் இயர்பட்ஸ் லைட் மாடல் ஆனது யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்த ஹெச்எம்டி குளோபல் நிறுவனம்.
லைட் ஸ்னோ மற்றும் சார்கோல்
குறிப்பாக நோக்கியா பவர் இயர்பட்ஸ் லைட் ஸ்னோ மற்றும் சார்கோல் என இரண்டு நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அனைத்து இடங்களுக்கு எளிமையாக எடுத்துச் சென்று பயன்படுத்தலாம்.
நோக்கியா பவர் இயர்பட்ஸ் லைட் மாடலின் விலை ரூ.3599-என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பின்பு இதன் விற்பனை வரும் பிப்ரவரி 17-ம் தேதி அமேசான் வலைத்தளத்தில் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக