அமெரிக்காவில் பல்வேறு தடைகளுக்கு மத்தியில் சீன வீடியோ பொழுதுபோக்கு செயலியான டிக்டாக் தனது வர்த்தகம் மற்றும் சேவைகளைத் தொடர்ந்து அமெரிக்கச் சந்தையில் அளிக்க வேண்டும் என்பதற்காக ஆரக்கிள் மற்றும் வால்மார்ட் உடன் வர்த்தகத்தைப் பகிரத் திட்டமிடப்பட்டது. ஆனால் இந்த வர்த்தக ஒப்பந்தம் தற்போது தடைப்பெற்று உள்ளது.
டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு டிக்டாக் செயலி மீது பல்வேறு வர்த்தகத் தடைகளை விதித்ததை அடுத்த டிக்டாக் தனது அமெரிக்க வர்த்தகத்திற்காக ஆரக்கிள் மற்றும் வால்மாரட் உடன் கூட்டணி வைக்க முடிவு செய்தது.
இந்நிலையில் தற்போது அமெரிக்காவில் ஜோ பைடன் தலைமையிலான ஆட்சி மாற்றம் ஏற்பட்டு உள்ள நிலையில் டிக்டாக் ஒப்பந்தம் கிடப்பில் போடப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில் டிக்டாக் ஒரு மாஸ்டர்பிளான் போட்டுள்ளது.
டிரம்ப் Vs டிக்டாக்
டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு டிக்டாக் செயலி நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கிறது என அறிவித்து இந்தச் செயலி மீது தடை விதிக்கப்பட்டது. இது அமெரிக்காவில் இருக்கும் டிக்டாக் வாடிக்கையாளர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது
டிரம்ப் அரசு உத்தரவு
இதன் பின் பல்வேறு பேச்சுவார்த்தைக்கு அடுத்த டிக்டாக் தனது அமெரிக்க வர்த்தகத்தைத் தனியாகப் பிரிந்து அமெரிக்க நிறுவனங்களுக்கு அளித்துவிட வேண்டும், இல்லையெனில் மொத்தமாக அமெரிக்கச் சந்தையை விட்டு வெளியேற வேண்டும் என ஆகஸ்ட் 2020ல் உத்தரவிடப்பட்டது.
தடையில் இருந்து தப்பித்த டிக்டாக்
முதல் கட்டமாக டிக்டாக் நிறுவனம் டிரம்ப் அரசு விதித்த உத்தரவில் எதிர்த்துத் தொடுத்த வழக்கின் மூலம், அமெரிக்கப் பயனாளர்கள் டிக்டாக் பயன்படுத்துவதில் இருந்த தடையை நீக்கப்பட்டது. இதன் பின்பு ஆரக்கிள் மற்றும் வால்மார்ட் டிக்டாக் செயலியை வாங்க ஆர்வம் காட்டியது.
டிக்டாக் குளோபல் நிறுவனம்
இதைத் தொடர்ந்து அமெரிக்காவில் தனது வர்த்தகத்தைத் தொடர வேண்டும் என்பதற்காக டிக்டாக் அமெரிக்கச் சந்தை வர்த்தகத்தைத் தனியாகப் பிரித்து டிக்டாக் குளோபல் என்ற தனி நிறுவனமாக அறிவித்து இதில் ஆரக்கிள் மற்றும் வால்மார்ட் ஆகிய நிறுவனத்தை முதலீடு செய்யும் எனக் கூறப்பட்டது.
டிக்டாக் முயற்சி
இந்நிலையில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு டிக்டாக் மீதான தடையை நீக்க பைடன் அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், எவ்விதமான தளர்வுகளையும் பைடன் அரசு காட்டவில்லை. இது டிக்டாக் நிறுவனத்திற்கும் பெரும் தடையாக மாறிவிட்டது.
டிக்டாக் மாஸ்டர்பிளான்
இதேவேளையில் டிக்டாக் செயலி Committee on Foreign Investment in the US (CFIUS) அமைப்பிடம் ஒரு ஒப்பந்தம் செய்ய உள்ளதாகவும், இந்த ஒப்பந்தம் மூலம் டிக்டாக்-ன் அமெரிக்கத் தரவுகளை ஒரு 3ஆம் தரப்பு நிறுவனம் நிர்வாகம் செய்யும். இந்த நிர்வாக மாடலுக்கு அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்தால் டிக்டாக் நிறுவனத்தை ஆரக்கிள் மற்றும் வால்மார்ட் நிறுவனத்திற்கு விற்பனை செய்யத் தேவையில்லை எனப் புதிதாகத் திட்டம் தீட்டப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
ஆரக்கிள் - வால்மார்ட் ஒப்பந்தம்
இதேவேளையில் ஆரக்கிள் மற்றும் வால்மார்ட் நிறுவனத்துடனான ஒப்பந்தம் முழுமையாக ரத்து செய்யப்படவில்லை என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
டிக்டாக் மீது டிரம்ப் அரசு அடுத்தடுத்து விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மற்றும் உத்தரவுகளைத் தற்போது பைடன் அரசு ஆய்வு செய்வதாகத் தெரிகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக