சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனாவிற்கு 2021-ம் ஆண்டிலும் ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை. குறிப்பாக உலக அளவில் கொரோனா தொற்றால் 10 கோடியே 78 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
அமெரிக்கா, இங்கிலாந்து
அதிலும் குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, மெக்ஸிகோ பிரேசில், ஜெர்மனி போன்ற நாடுகளில் கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாக உள்ளது. மேலும் தொடர்ந்து இந்த தொற்று நோய் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதால் என்ன செய்வது என்று தெரியாமல் இந்த நாடுகள் தவித்து வருகின்றன.
ஆன்லைன் வீடியோ கால்
இதுபோன்ற காலகட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரி வகுப்புகள், அலுவலகத்திற்கு செல்லும் அதிகாரிகள் மற்றும் இதர நிறுவனங்கள் தொடர்பான சந்திப்புகள் அனைத்து ஆன்லைன் வீடியோ கால் மூலமாகவே நடைபெற்று வருகிறது.
அதேசமயம் இந்த ஆன்லைன் வீடியோ கால் வசதி இருப்பதால் பல்வேறு வேலைகளை எளிமையாக முடிக்க உதவுகிறது. இருந்தபோதிலும் வீடியோ கால் சந்திப்புகளில் நிகழும் சில தவறுகள் அல்லது ஏதேனும் வாடிக்கையான காரியங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி விடுகிறது.
நீதிமன்ற விசாரணை
அப்படி ஒரு சம்பவம் நடைபெற்று தற்போது சமூக வலைத்தளங்களில் அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. அதாவது அமெரிக்க வழக்கறிஞரான ரோட் போண்டோன் என்பர், ஆன்லைன் மூலம் நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில், தனது உதவியாளரின் கணினி மூலம் பங்கு கொண்டுள்ளார்.
ஃபில்டர் ஆன் ஆகியுள்ளது
அந்தசமயம் அவர் பேசிக் கொண்டிருந்த போது திடீரென் ஃபில்டர் ஆன் ஆகியுள்ளது. பின்பு அதனை அணைக்க வழக்கறிஞர் முயன்ற நிலையில் அவரால் முடியவில்லை. அப்போது அந்த அழைப்பில் இருந்த நீதிபதி நீங்கள் பேசுவது கேட்கிறது.
நான் பூனையில்லை
ஆனாலும் ஏதோ ஃபில்டர் இயக்கத்தில் இருக்கிறது என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார். பின்பு இதற்கு பதில் பேசிய வழக்கறிஞர் இந்த ஃபில்டர்-ஐ எப்படி மாற்றுவது என எனக்கு தெரியவல்லை. எனது உதவியாளர் இதனை மாற்ற முயற்சி செய்கிறார். நான் பூனையில்லை' என கூறியுள்ளார்.
மேலும் இந்த சம்பவம் பற்றி பிறகு பேசிய ரோட் கூறியது, எனது உதவியாளரின் தவறுதலால் அப்படி நிகழ்ந்தது. அவர் தனது கணினியில் பூனை ஃபில்டரை ஆன் செய்து வைத்திருந்தார். நான் சில நிமிடங்களுக்கு பிறகு அதனை மாற்றி என் முகத்தை சரி செய்து கொண்டேன் எனக் கூறியுள்ளார்.
இருந்தபோதிலும் வழக்கறிஞரின் வாடிக்கையான இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் அதிகமாக வைரலாக வருகிறது. அதிலும் பூனை பேசுவது போல் இருப்பதால் இந்த வீடியோவிற்கு அதிக லைக்குகள் வந்த வண்ணம் உள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக