iQOO நிறுவனம் வரும் ஏப்ரல் மாதம் புதிய iQOO 7 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் சீனாவில் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது. மேலும் இந்த சாதனத்தின் அம்சங்கள் தற்சமயம் ஆன்லைனில் வெளியாகியுள்ளது. அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.
ஐக்யூ 7 ஸ்மார்ட்போன்
ஐக்யூ 7 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஓசி செயலியுடன் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போனில் டிரிபிள் ரியர் கேமராக்கள், 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே புதுப்பிப்பு வீதம் மற்றும் 120வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. ஐக்யூ 7 ஸ்மார்ட்போனில் பிஎம்டபிள்யூ மோட்டார்ஸ் போர்ட் இணைந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் பின்புறத்தில் மூன்று வண்ண கோடுகள் உள்ளன.
ஐக்யூ 7 விலை குறித்து பார்க்கையில், இதன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதியின் விலை CNY 3,798 அதாவது இந்திய மதிப்புப்படி ரூ.43,100 ஆகவும், 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பு வசதியின் விலை CNY 4,198 இந்திய மதிப்புப்படி ரூ.47,600 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு 11 இயக்க முறை
ஐக்யூ 7 ஸ்மார்ட்போன் அம்சங்கள் குறித்து பார்க்கையில் இது இரட்டை நானோ சிம் உடன் வருகிறது. இது ஆண்ட்ராய்டு 11 இயக்க முறை அணுகல் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6.62 இன்ச் முழு எச்டி ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ளே இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஓசி செயலி மூலம் இயக்கப்படுகிறது.
48 மெகாபிக்சல் முதன்மை கேமரா
ஐக்யூ 7 கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில், இதில் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இருக்கிறது. 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 13 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா மற்றும் 13 மெகாபிக்சல் மூன்றாம் நிலை கேமரா இருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
4000 எம்ஏஎச் பேட்டரி
ஐக்யூ 7 இணைப்பு ஆதரவுகள் குறித்து பார்க்கையில், இது 5ஜி ஆதரவு, வைஃபை 6, யூஎஸ்பி டைப்சி போர்ட் உள்ளிட்டவைகள் உள்ளன. பாதுகாப்பு அம்சத்திற்கு டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 4000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக