நாய்ஸ் பட்ஸ் சோலோ ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ (டிடபிள்யூஎஸ்) இயர்போன்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஹைப்ரிட் ஆக்டிவ் நாய்ஸ் ரத்து அம்சத்துடன் வருகின்றன. ஒலியில் இருந்து நாய்ஸ் ரத்து செய்யும் முதல் டிடபிள்யூ இயர்போன் இதுவாகும். காதில் கச்சிதமாக பொருந்தும் வகையில் இந்த இயர்போன்கள் தோற்றம் இருக்கிறது.
நாய்ஸ் பட்ஸ் சோலோ டிடபிள்யூஎஸ் இயர்போன்கள்
இந்த இயர்போன்கள் இம்மாத இறுதியில் சந்தைக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நாய்ஸ் பட்ஸ் சோலோ, நாய்ஸ் பட்ஸ் பாப் விலை விவரங்கள் குறித்து பார்க்கலாம். நாய்ஸ் பட்ஸ் சோலோ டிடபிள்யூஎஸ் இயர்போன்கள் விலை ரூ.4999 என இந்தியாவில் கிடைக்கும். இது சார்கோல் பிளாக், யூக்ரோ கோல்ட், சேஜ் கிரீன் மற்றும் ஸ்டோன் ப்ளூ ஆகிய வண்ணங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.
நாய்ஸ் பட்ஸ் பாப் டிடபிள்யூஎஸ் விலை
நாய்ஸ் பட்ஸ் பாப் டிடபிள்யூஎஸ் இயர்போன்கள் அறிமுகப்படுத்தப்பட்ட குறுகிய காலத்திற்கு ரூ.2999 என கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது. பிப்ரவரி 28 ஆம் தேதி இது தொடங்கப்படும் என கூறப்படுகிறது.
10மிமீ டிரைவர்கள் உடன் வரும் இயர்போன்கள்
நாய்ஸ் பட்ஸ் சோலோ அம்சங்கள் குறித்து பார்க்கையில் இது 10மிமீ டிரைவர்களை கொண்டுள்ளது. இதன் ஆக்டிவ் நாய்ஸ் ரத்து அம்சம் வெளிப்புற சத்தத்தை கண்டறிந்து ரத்து செய்ய மூன்று மைக் அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த அம்சம் 35 டெசிபல் வரை குறைக்க முடியும் என நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது. இது ப்ளூடூத் 5.0, எஸ்பிசி மற்றும் ஏஏசி கோடெக்குகளை ஆதரிக்கிறது.
ஆக்டிவ் நாய்ஸ் ரத்து அம்சம்
நாய்ஸ் பட்ஸ் சோலோ ஏழுமணி சார்ஜிங் மூலம் மொத்தம் 36 மணிநேர ப்ளேடைம் உடன் கூடுதல் சார்ஜிங் கேஸ் மூலம் 29 மணிநேரம் பயன்பாடு வழங்கப்படுகிறது. யூஎஸ்பி டைப்சி போர்ட் வசதி இருக்கிறது. இதில் ஹைப்ரிட் நாய்ஸ் ரத்து அம்சம், டிரான்ஸ்பிரன்ட் மோட், வால்யூம் கண்ட்ரோல், மியூசிக் அழைப்பு மற்றும் குரல் உதவி ஆகிய அம்சங்கள் இருக்கிறது.
வாட்டர் மற்றும் வியர்வை எதிர்ப்பு ரெசிஸ்டென்ட்
வியர்வையை எதிர்க்கும் ஸ்வெட் ரெசிஸ்டென்ட் அம்சம் இதில் இருக்கிறது. நாய்ஸ் பட்ஸ் பாப் அம்சங்கள் குறித்து பார்க்கையில் இதில் சுற்றுச்சூழல் சத்தம் ரத்து அமைப்புக்கான குவாட் மைக் அம்சத்தை கொண்டுள்ளது. இது 30 மணிநேர ப்ளேடைம் அம்சத்தை கொண்டிருக்கிறது. இது தடையற்ற மற்றும் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக