
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பப்ஜி விளையாடுவதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தனர். ஆனால் இந்திய அரசு இந்த பப்ஜி விளையாட்டை சில மாதங்களுக்கு முன்பு தடைசெய்தது. ஆனால் தடை செய்யப்பட்ட நாளில் இருந்து இப்போ வரும் அப்போ வரும் என்று பப்ஜி மொபைல் இந்தியா அறிமுகம் குறித்த தகவல் தொடர்ந்து வெளியான வண்ணம் இருக்கிறது.
பப்ஜி New State
இந்நிலையில் பப்ஜி New State எனும் புதிய கேமை கொண்டுவந்துள்ளனர். மேலும் இந்த கேமின் first look வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது அந்நிறுவனம். இந்த வீடியோ இணையத்தில் அதிகமாக வைரலாகி வருகிறது என்று தான் கூறவேண்டும்.
பப்ஜி New State கேம் பார்க்க எப்படி இருக்கும்?
மேலும் இந்த பப்ஜி New State கேம் பார்க்க எப்படி இருக்கும்? என்னென்ன ஆயுதங்கள் இருக்கும்? என்னென்ன வாகனங்கள் இருக்கும்? புதிய பிளேயர்கள் என அனைத்தையும் இந்த first look வீடியோயில் தெரியப்படுத்தியுள்ளது அந்நிறுவனம். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் வேறலெவலில் இந்த கேம் உள்ளது.
பப்ஜி New State டிசைன்
அதாவது பப்ஜி New State டிசைன் மிகவும் அருமையாக இருக்கிறது. குறிப்பாக ஒரு மனிதன் நடந்தாலோ, ஓடினாலோ, எந்த அளவுக்கு நிஜமாக இருக்குமோ, அந்த அளவுக்கு மிகவும் துல்லியமாக டிசைன் செய்துள்ளனர் இந்த கேமின் வடிவமைப்பாளர்கள்.
ஆளில்லா குட்டி விமானம்
அதேபோல் வேறலெவலில் இந்த பப்ஜி New State கேம்-க்கு கிராபிக்ஸ் செய்துள்ளனர். மொபைலில் கூட மிக துல்லியமாக விளையாட வழிவகை செய்கிறது இந்த கிராபிக்ஸ். அதன்பின்பு புதுப்புது இடங்கள், புதிய மேப்ஸ் இந்த கேமில் சேர்க்கப்பட்டுள்ளன. குறிப்பாக இதில் ட்ரோன் எனப்படும் ஆளில்லா குட்டி விமானம் இதில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போதைக்கு இந்த புதிய பப்ஜி New State விளையாட்டை அறிமுகம் செய்யவில்லை. ஆனால் முன்பதிவு துவங்கி இருப்பதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஆனால் இந்தியாவிற்கு இந்த கேம் இப்போதைக்கு கிடைக்காது என்று கூறப்படுகிறது. கூடிய விரைவில் இந்தியாவிற்கு இந்த கேம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக