Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 26 பிப்ரவரி, 2021

உங்கள் பிஎஸ்என்எல் தொலைபேசி எண்ணை மறந்துவிட்டீர்களா? அப்போ இதை செய்யுங்கள்..

எளிய வழிமுறை இதுதான்

அரசுக்கு சொந்தமான தொலைத் தொடர்பு ஆபரேட்டர் BSNL இந்தியாவில் நம்பகமான சேவை வழங்குநர்களில் ஒருவராகத் திகழ்கிறது. தனியார் தொலைத் தொடர்பு ஆபரேட்டர்கள் ஒரு பெரிய தளத்தைக் கொண்டிருந்தாலும், பி.எஸ்.என்.எல் ஒரு பெரிய வாடிக்கையாளர் தளத்தைக் கொண்டுள்ளது. அது பல சேவைகளையும் சலுகைகளையும் வழங்கி வருகிறது.

உங்கள் மொபைல் எண்ணை நினைவில் இல்லையா?

நீங்கள் இப்போது பிஎஸ்என்எல் சேவைகளுக்காக பதிவுசெய்திருந்தால், உங்கள் மொபைல் எண்ணை நினைவில் வைத்துக் கொள்வது கடினம். தொலைபேசி எண்களை நினைவில் வைத்திருப்பதன் பின்னணியில் உள்ள தொந்தரவு அரசுக்கு சொந்தமான டெல்கோவுக்கு தெரியும். அதைச் சரி செய்ய, பயனர்கள் தங்கள் தொலைபேசி எண்ணை அறிய அனுமதிக்கும் பல விருப்பங்களை பிஎஸ்என்எல் இப்போது வழங்குகிறது.

எளிய வழிமுறை இதுதான்

யு.எஸ்.எஸ்.டி (USSD) குறியீடுகள் மூலம் BSNL தொலைபேசி எண்ணை அறியும் முறை தான் இருப்பதிலேயே சுலபமான முறையாகும். BSNL நிறுவனம் USSD மூலம் கணக்கு இருப்பு சரி பார்ப்பது, தரவுத் திட்டம் கிடைக்கும் தன்மை மற்றும் பலவற்றை அறிந்து கொள்ளப் பயனர்களுக்கு உதவுகிறது. பி.எஸ்.என்.எல் பயனர்கள் ஒரு குறிப்பிட்ட யு.எஸ்.எஸ்.டி குறியீட்டைப் டைப் செய்வதன் மூலம் அவர்களின் தொலைபேசி எண்ணை அறிந்து கொள்ள முடியும்.

 USSD மூலம் பிஎஸ்என்எல் தொலைபேசி எண்ணை அறியும் முறை

தொலைபேசி எண்ணைச் சரிபார்க்க, உங்கள் பிஎஸ்என்எல் மொபைல் எண்ணிலிருந்து * 222 # ஐ டயல் செய்யுங்கள். அழைப்பு இணைக்கப்பட்டதும், பயனர்களுக்கு உடனடியாக ஒரு எஸ்எம்எஸ் வரும், இதில் பயனர்களின் மொபைல் எண் காண்பிக்கப்படும். ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் பிஎஸ்என்எல் பயனர்களுக்கு இந்த USSD குறியீடுகள் ஒரே மாதிரியாகச் செல்லுபடியாகும்.

ஆப்ஸ் மூலம் பிஎஸ்என்எல் தொலைபேசி எண்ணை அறிய முடியுமா?

தொலைபேசி எண்ணை அறிய ஏதேனும் வேறு வழி இருக்கிறதா என்று நீங்கள் கேட்டால், அதற்கும் நம்மிடம் பதில் உண்டு. பிஎஸ்என்எல் பயனர்கள் தங்கள் தொலைபேசி எண்ணை அறிய பிஎஸ்என்எல் ஆப்ஸ் பயன்பாட்டைப் பயன்படுத்தலாம். தொலைபேசி எண்ணை அறிய, அதிகாரப்பூர்வ BSNL ஆப்ஸை பதிவிறக்கம் செய்து, உங்கள் மொபைல் எண்ணுடன் லாகின் செய்து, முகப்புத் திரையில் உங்களின் தொலைபேசி எண்ணைக் காணலாம்.

நன்மைகளும் சலுகைகளும்

பிஎஸ்என்எல் பயன்பாடு பயனர்களுக்கு பல நன்மைகளையும் சலுகைகளையும் வழங்குகிறது. நீங்கள் செயலில் உள்ள பிஎஸ்என்எல் பயனராக இருந்தால், உங்கள் கணக்கை ரீசார்ஜ் செய்து பல்வேறு தள்ளுபடியை அனுபவிக்க BSNL பயன்பாட்டைப் பயன்படுத்தலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக