இணையம் சார்ந்த பண பரிவர்த்தனையான கிரிப்டோகரன்சி வகையை சேர்ந்தது பிட்காயின். வங்கி சார்ந்த பரிவர்த்தனைகளுக்கு எதிராக இருப்பவை இந்த பரிவர்த்தனை. இந்தியாவில் பல இடங்களில் பிட்காயின் பெயர் எதிரொலிப்பது வழக்கம். காரணம் பிட்காயின் மதிப்பு குறுகிய காலத்தில் அதிகளவு அதிகரித்து வருகிறது.
பிட்காயின் இந்தியா
முன்னதாக பிட்காயின் கொண்டு பரிவர்த்தனைகள் மேற்கொள்ளக்கூடாது என வங்கிகளுக்கும் அறிவுறுத்தியும் மக்களும் பிட்காயின் வணிகத்தில் ஈடுபடக் கூடாது எனவும் ரிசர்வ் பேங்க் கூறியிருந்தது. இதையடுத்து இந்தியாவில் பிட்காயின் குறித்து பெரிய விவாதம் ஏதும் இல்லாமல் இருந்தது.
சட்டங்கள் ஏதும் இல்லை
ஆனால் பிட்காயின் குறித்து இதுவரை எந்தவொரு சட்டமும் கொண்டுவரப்படவில்லை என்பதால் அதற்கு மீண்டும் உயிர் கொடுத்திருக்கிறது உச்ச நீதிமன்றம். அதாவது கிர்ப்டோகரன்சி தொடர்பான எந்தவொரு சட்டமும் இந்தியாவில் இல்லாத நிலையில், அதை ரிசர்வ் வங்கியால் தடைசெய்ய முடியாது என உச்ச நீதிமன்றம் கூறியது.
டிஜிட்டலாக இருக்கும் கரன்சிதான் கிரிப்டோகரன்சி
க்ரிப்டோகரன்சி மேல் ரிசர்வ் வங்கி விதித்திருத்த தடையும் கடந்த மார்ச் 4 ஆம் தேதிமுதல் நீக்கப்பட்டது. அதாவது நிஜ உலகில் புழங்க முடியாத, டிஜிட்டலாக மட்டுமே உள்ள கரன்சிதான் கிர்ப்டோகரன்சி. இதில் நமக்கு பரீட்சையமானவை தான் இந்த பிட்காய்ன்கள்.
விரும்பிய நாட்டில் பணமாக மாற்றலாம்
உலகளாவிய பணம் செலுத்தும் முறைமையாக பிட்காயின் இருக்கிறது. உலகளவில் பல வணிக வளாகங்கள் மற்றும் இடங்களில் பிட்காயின்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. பிட்காயின்களை விரும்பிய நாட்டில் பணமாக மாற்றலாம். பிட்காயின் பாதுகாப்பு வழிமுறைகள் அனைத்தும் பிளாக்செயின் முறையில் பாதுகாக்கப்படுகிறது.
வங்கிகளுக்கும் பயனர்களுக்கும் இல்லாமல் இரண்டு நபர்களுக்கு இடையிலோ அல்லது இரண்டு கணக்குகளுக்கோ இடையிலோ இந்த பரிவர்த்தனை நடக்கிறது. இது மிகவும் எளிதான பரிவர்த்தனையாக இருக்கிறது. மேலும் இதை தினசரி 24 மணிநேரம் என்ற வீதம் 365 நாட்களுக்கு பரிவர்த்தனை செய்யலாம்.
பிளாக்செயின் தொழில்நுட்பம்
பிட்காயினுக்கு பயன்படுத்தப்படும் பிளாக்செயின் தொழில்நுட்பம் மிக பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. பிட்காயின்கள் பரிவர்த்தனை நோக்கமாக முன்னெடுக்கப்பட்டாலும் பலர் முதலீடுகளாகவே பார்க்கின்றனர். அதேபோல் பிட்காயின்களானது சாடோஷி நாகமோட்டோ என்று தங்களை கூறிகொள்பவர்களால் உருவாக்கப்பட்டது. அவர்கள் தகவல் முறையாக தெரியவில்லை என கூறப்படுகிறது.
பிட்காயின்களானது கடந்த 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 2010 ஆம் ஆண்டு அதன் மதிப்பு 0.0003 டாலராகத்தான் இருந்தது. ஆனால் தற்போது பிட்காயின் மதிப்பு பல ஆயிரம் டாலர்களாக இருக்கிறது. சில பொருளாதார வல்லுனர்கள் பிட்காயின் மதிப்பு தொடர்ந்து உயரும் என்று கூறினாலும் சிலர் பிட்காயின் மதிப்பு நிலையற்றது சரிவை காணும் என எச்சரிக்கை விடுக்கின்றனர்.
சமீபத்தில் இந்தியாவில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. உலகம் முழுவதும் பிட்காயின்களை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது. அதில் ஐந்து மில்லியன் இந்தியர்கள் 1,000 கோடிக்கும் அதிகமாக இந்த க்ரிப்டோகரன்சியில் முதலீடு செய்துள்ளதாக வசீர்எக்ஸ் என்ற க்ரிப்டோ எக்ஸ்சேஞ்ச் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான நிக்கல் ஷெட்டி (Nischal Shetty) தெரிவித்திருந்தார்.
1 பிட்காயின் இந்திய ரூபாய் மதிப்பு
ஒரு பிட்காயினின் இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.27,42,075 ஆக இருக்கிறது. தொடர்ந்து அதிக நாட்கள் ஏற்றத்தையே காணும் பிட்காயின் மதிப்பு அவ்வப்போது லேசாக இறக்கம் அடைகிறது. ஆனால் ஏற்றம் என்பதே அதிகம். ஜனவரி 6 2021., 1 பிட்காயின் மதிப்பு சுமார் 26 லட்சமாக இருந்த நிலையில் பிப்ரவரி 5 2021 தேதியில் பிட்காயின் மதிப்பு சுமார் 27 லட்சமாக அதிகரித்துள்ளது. ஒரு மாதத்தில் 1 லட்சம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆன்லைனில் பிட்காயின் பெறுவதற்கான பொதுவான வழிகள், கணக்கெடுப்புகள், ஷாப்பிங் மற்றும் கிரிப்டோ மைனிங் ஆன்லைன் பரிவர்த்தனை ஆகும். ஸ்மார்ட்போன்களில் பல கிரிப்டோ வெகுமதி ஷாப்பிங் பயன்பாடுகள் உள்ளன, அங்கு நீங்கள் பொருட்களை வாங்கும்போது கிரிப்டோ புள்ளிகளை வெகுமதிகளாக பெறலாம்.
பிட்ரெஃபில் என்பது கூகிள் பிளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்து கிரிப்டோ புள்ளிகளை இலவசமாகப் பெறக்கூடிய ஒரு பயன்பாடு ஆகும். கிரிப்டோ மைனிங் பயன்பாடும் குறைந்த செலவில் கிரிப்டோகரன்சியைப் பெறுவதற்கான மற்றொரு பிரபலமான முறையாக மாறியுள்ளது. கிரிப்டோகரன்சி வர்த்தகத்தை அனுமதிப்பதற்கு பைபிட்(Bybit), பைனான்ஸ் (Binance) போன்ற பல பயன்பாடுகள் உள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக