கடந்த சில வருடங்களாக அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இதற்கு ஆரம்பத்தில் பலத்த எதிர்ப்புகள் இருந்தாலும், பின்னர் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
ஆரம்பத்தில் நஷ்டம் கண்ட நிறுவனங்களின் பங்குகளை விற்பதாக கூறிய அரசு, பின்னர் நல்ல முறையில் இயங்கி வரும் நிறுவனங்களின் பங்கினையும் விற்க திட்டமிட்டு வந்தது.
குறிப்பாக எல்ஐசி, ரயில்வே தனியார்மயம் என பலவும் அரசு லிஸ்டில் வந்தது.
பட்ஜெட் 2021 பங்கு விற்பனை
இதற்கிடையில் தான் பலமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பட்ஜெட் 2021ஐ தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டார். அதில் முக்கியமான அறிவிப்புகளில் ஒன்று, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை. வங்கிகளின் பங்கு விற்பனை, பொதுபங்கு வெளியீடுகள் பற்றிய முக்கிய அறிவிப்பினையும் அப்போது வெளியிட்டார்.
பட்ஜெட்டில் அறிவிப்பு
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசியின் பொது பங்கு வெளியீட்டிற்கான பணிகள் இந்த ஆண்டில் முடிவடையும். நிலுவையில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனையும் விரைவில் செயல்படுத்தப்படும் என்றும் கூறினார். குறிப்பாக பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், ஏர் இந்தியா, SCI,CCI, IDBI, BEML, Pawan Hans, CONCOR, IDBI, உள்ளிட்ட சில நிறுவனங்களின் பங்கு விற்பனை விரைவில் செயல்படுத்தப்படும் என்றும் தனது பட்ஜெட் அறிக்கையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார்.
இன்னும் சில பங்கு விற்பனை
அதுமட்டும் அல்ல அப்போது, தனியார்மயமாக்கப்படும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம் 1.75 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்ட இலக்கு வைத்துள்ளார். அதோடு இரண்டு வங்கிகளின் பங்குகளை விற்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார். அதோடு இன்னும் சில புதிய பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்பனை செய்யப்படும் என்றும், இந்த நிறுவனங்களின் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறியிருந்தது நினைவுகூறத்தக்கது.
இன்னும் சில வாரங்களில் அடுத்த லிஸ்ட்
இது குறித்து நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார், இன்னும் சில வாரங்களில் பங்கு விற்பனை செய்யப்படும், சில பொதுத்துறை நிறுவனங்களின் பட்டியல் வெளியிடப்படும் என்று கூறியுள்ளார். ஆக இன்னும் சில வாரங்களில் தெரிந்து விடும் அடுத்த சில நிறுவனங்கள் என்னவென்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக