இந்தியாவில் ஒப்போ ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. சியோமிக்கு அடுத்தபடியாக பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் பிரிவில் ஒப்போ நிறுவனம் அதிகப்படியான ஸ்மார்ட்போன்களை இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. தற்பொழுது வெளியான தகவலின் படி ஒப்போ நிறுவனம் அடுத்த மாதம் இரண்டு அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்யவிருக்கிறது என்று கூறப்படுகிறது.
ஆம், அடுத்த மாதம் ஒப்போ நிறுவனம் ஒப்போ F19 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல் மற்றும் ஒப்போ பைண்ட் எக்ஸ் 3 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை பட்ஜெட் விலை பிரிவின் கீழ் அறிமுகம் செய்யுமென்று அறிவித்துள்ளது. ஆக மொத்தத்தில் அடுத்த மாதம் ஒப்போ ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் காத்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் முக்கிய தகவல்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது.
ஒப்போ F19 சீரிஸ் ஸ்மார்ட்போன் பற்றி ஜனவரி மாதத்திலிருந்தே சில தகவல்கள் லீக் ஆகிவந்தது. இந்த ஸ்மார்ட்போன் பிப்ரவரி துவக்கத்தில் ஒப்போ F21 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்பட்டு வந்தது, ஆனால், ஒப்போ F21 என்பது தனி ஸ்மார்ட்போன் மாடல் என்று தற்பொழுது தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் இந்த ஆண்டில் அறிமுகம் செய்யப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதேபோல், ஒப்போ பைண்ட் எக்ஸ் 3 ஸ்மார்ட்போன் மாடலும் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஒப்போ பைண்ட் எக்ஸ் 3 சீரிஸ் போன்கள் ஸ்னாப் டிராகன் 888 சிப்செட் உடன் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பற்றிய முக்கிய விபரங்களைக் கடந்த வாரம் வெளியிட்டிருந்தோம். இப்போது, ஒப்போ பைண்ட் எக்ஸ் 3 ப்ரோ பற்றிய சில முக்கிய தகவல்களைப் பார்க்கலாம்.
ஒப்போ பைண்ட் எக்ஸ் 3 ப்ரோ மார்ட்போன், 50 எம்.பி சோனி ஐஎம்எக்ஸ் 766 முதன்மை சென்சாரை அதிவேக கேமரா சென்சாருடன் பயன்படுத்தும் என்றும், ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 3 ப்ரோ 3 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸுடன் 25X ஜூம் ஆதரவுடன் வரும். இது மைக்ரோஸ்கோப் போன்ற அனுபவத்தை வழங்கும். இந்த போன் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொபைல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக