Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 3 பிப்ரவரி, 2021

ரிஷப ராசியில் கேது இருந்தால் என்ன பலன்?

👉 ரிஷப ராசியின் அதிபதி சுக்கிர பகவான் ஆவார். சுக்கிரனுடன் கேது நட்பு என்ற நிலையில் இருப்பினும், நீச்சம் என்ற நிலையை அடைகின்றார். கேது பகவான் நீச்ச நிலையில் இருக்கும்போது செய்யும் சுப மற்றும் அசுப பலன்களை பற்றி காண்போம்

👉 வேறுபட்ட சிந்தனைகளை கொண்டவர்கள்.

👉 எதிலும் நிதானமாக ஆழ்ந்து சிந்தித்து செயல்படக்கூடியவர்கள்

👉 தங்களைப் பற்றி எப்பொழுதும் உயர்வாக எண்ணக்கூடியவர்கள்.

👉 ஆன்மிகத்தில் நாட்டம் உடையவர்கள்.

👉 எதிர்பாலின மக்களை கவர்வதில் ஆர்வம் கொண்டவர்கள்.

👉 எதிலும் நேர்த்தியான செயல்பாடுகளை உடையவர்கள்

👉 எதிலும் விடாமுயற்சி உடையவர்கள்.

👉 வாசனை திரவியங்கள் மற்றும் புது உடைகளை அணிவதில் விருப்பம் கொண்டவர்கள்.

👉 மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்டவர்கள்.

👉 கலை ரசனை உடையவர்கள்.

👉 மறைமுக சக்திகளைப் பற்றி ஞானம் கொண்டவர்கள்.

👉 எதிலும் விளம்பரம் மற்றும் தற்பெருமை கொண்டவர்கள்.

👉 மனதில் உள்ள எண்ணங்களை வெளிப்படுத்த விரும்பாதவர்கள்.

👉 தனது காரியத்தில் கண்ணும் கருத்துமாக செயல்படக்கூடியவர்கள்.

👉 எச்சரிக்கையான செயல்பாடுகளை கொண்டவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக