-----------------------------------------------
சிரிக்கலாம் வாங்க...!!
-----------------------------------------------
அப்பா : கண்ணா ராத்திரி தூங்கும்போது செல்போனை சார்ஜில போடாதப்பா.
மகன் : ஏம்ப்பா?
அப்பா : பேட்டரி சூடானா எப்பவாவது வெடிக்கவும் செய்யலாம்...
மகன் : அது தெரியும்பா. அதனாலதான் சார்ஜ் போடும்போது பேட்டரியை கழட்டி வெச்சிடுவேன்.
அப்பா : 😉😉
-----------------------------------------------
விமலா : என் மாமியாரும் நானும் சும்மா இருந்தாலும் என் புருஷன் சண்டை போடச் சொல்லி வற்புறுத்துவாரு...
அமலா : ஏன்?
விமலா : வீட்டோட இயல்பு நிலை பாதிச்சிடக் கூடாதுன்னுதான்.
அமலா : 😆😆
-----------------------------------------------
அழகு குறிப்புகள்...!!
-----------------------------------------------
உதடு சிவப்பாக மாற, இரவு தூங்கும் முன் வெண்ணெயை உதட்டில் தடவவும்.
வெள்ளரிக்காயை துண்டுகளாக வெட்டி உதட்டில் தேய்க்கவும்.
ஈரப்பதத்தை தொடர்ந்து தக்கவைக்க தேன் தடவிக்கொள்ளவும். இவ்வாறு தொடர்ந்து செய்வதால் பிறர் பார்த்து வியக்கும் வண்ணம் உதடு சிவப்பாக மாறும்.
-----------------------------------------------
இடி இடிக்கும்போது அர்ஜுனா... அர்ஜுனா-ன்னு சொல்வாங்களே அது ஏன்-னு தெரியுமா?
-----------------------------------------------
நம் ஊரில் மழை பெய்யும்போது இடி இடித்தால் போதும். அர்ஜுனா... அர்ஜுனா என்று சொல்பவர்களை பார்த்திருக்கிறோம்.
இதற்கான அறிவியல் காரணம் என்ன தெரியுமா?
இடி பலமாக இடிக்கும்போது, சிலரது காது அடைத்து கொய்ங்... என்று சத்தம் வரும்.
இதிலிருந்து தப்ப அர்ஜுனா என்றால் போதும், காது அடைக்காது.
அர் என்று சொல்லும்போது, நாக்கு மடிந்து மேல் தாடையைத் தொடும்.
ஜு என்னும்போது வாய் குவிந்து காற்று வெளியேறும்.
னா என்னும்போது, வாய் முழுமையாகத் திறந்து காற்று வெளியே போகும்.
இப்படி காற்று வெளியேறுவதால் காது அடைக்காது.
அதற்குத்தான் அர்ஜுனா-வை நம்மவர்கள் துணைக்கு அழைத்தார்கள்.
அர்ஜுனன் கிருஷ்ண பக்தன் என்பதால், அவன் பெயரை உச்சரிப்பது மனதுக்கு பலம் என்ற ஆன்மிக காரணத்துடன், காது அடைத்து விடக்கூடாது என்ற அறிவியல் காரணமும் இதில் புதைந்து கிடக்கிறது.
இதற்குதான் இடி இடிக்கும்போது நம் முன்னோர்கள் இப்படி சொல்லியிருக்கிறார்கள்.
ரிலாக்ஸ் ப்ளீஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக