கொஞ்சம் சிரிங்க பாஸ்...!!
------------------------------------------------
தாய் : ஏன்டா, எப்போதும் உனக்கு மருந்த பாட்டியேதான் கொடுக்கணும்னு சொல்ற?
சிறுவன் : பாட்டிக்குத்தான் கை நடுங்கும். அதனால பாதி மருந்து கீழேயே போயிடும்.
தாய் : 😖😖
------------------------------------------------
பாபு : என் மனைவி சமையலறை பக்கமே போயிருக்க மாட்டான்னு நினைக்கிறேன்!
கோபு : எப்படி சொல்ற?
பாபு : இன்னைக்கு காலைல அவ முட்டையை சோடா ஒபனரை வைச்சு திறந்துக்கிட்டிருந்தா.
கோபு : 😅😅
------------------------------------------------
புதிர் கேள்விகள்...!!
------------------------------------------------
1. மழைக்காலத்தில் 3 பெண்கள் ஒரே குடையில் சென்றனர். குடையும் சிறியது, ஆனாலும் அவர்களில் ஒருவர் கூட நனையவில்லை. அது எப்படி?
2. ஒரு பண்ணையில் கோழிகளும், ஆடுகளும் திருடப்பட்டன. போலீஸ் விசாரிக்கையில் அங்கு இருந்த காவல்காரன் பின்வருமாறு கூறினான். திருடு போனவற்றின் கால்களை எண்ணினால் 330, தலைகளை எண்ணினால் 92 என்றான். அப்பயென்றால் திருடுபோன ஆடுகள் எத்தனை, கோழிகள் எத்தனை?
------------------------------------------------
அட அப்படியா...!!
------------------------------------------------
தொலைநோக்கிகளிலேயே காவலூர் வைணுபாப்பு மிகப்பெரிய தொலைநோக்கியாகும்.
தமிழகத்தின் நுழைவாயிலாக, துறைமுகத்தைக் கொண்ட தூத்துக்குடி திகழ்கிறது.
கங்கைக்கு ஈடான ஆறாக காவிரி ஆறு விளங்குகிறது. இது தென்னாட்டு கங்கை என்றும் அழைக்கப்படுகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கோயிலின் கோபுரம் மிக உயர்ந்த கோபுரம் என்ற பெருமையை கொண்டுள்ளது.
மலை வாசஸ்தலங்களில் எல்லாம் ராணியாக திகழ்வது ஊட்டியாகும்.
------------------------------------------------
குறளும்... பொருளும்...!!
------------------------------------------------
பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்.
பொருள் :
மகிழும்படியாகப் பேசி நட்புக் கொள்ளுதல் நன்மை என்று தெளியாதவர், தம்மை விட்டு நீங்கும்படியாகப் புறம் கூறி நண்பரையும் பிரித்து விடுவர்.
------------------------------------------------
விடை :
------------------------------------------------
1. அது மழைக்காலமே தவிர, அப்போது மழை பெய்யவில்லை.
2. ஆடுகள் 73, கோழிகள் 19
ரிலாக்ஸ் ப்ளீஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக