Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 18 பிப்ரவரி, 2021

சோலி முடிந்தது: இணையத்தில் ஆபாச வலைதள தகவல்களை தேடினாலே அவ்வளவுதான்- புகைப்படம் அர்த்தம் புரியுதா?

ஆன்லைன் புகார் மீது சைபர் பிரிவு போலீஸார் நடவடிக்கை

இணைய பயன்பாடு என்பது பிரதானமாக இருக்கும் இந்த காலக்கட்டத்தில் அதனால் ஏற்படும் ஆபத்து குறித்த புகாரும் தொடர்ந்து குவிந்த வண்ணம் இருக்கிறது. இதை சரிசெய்வதற்கு சைபர் பிரிவு போலீஸார் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர்.

இருப்பினும் தொடர்ந்து இணையதள மோசடி அதிகரித்துக் கொண்டே வருகின்றனர். தாங்கள் ஹேக் செய்யப்படுகிறோம் என தெரியாமலே பலர் சிக்கி இருக்கின்றனர். ஆன்லைன் புகார் மீது சைபர் பிரிவு போலீஸார் தீவிரமாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

உத்தரப்பிரதேச காவல்துறை, அம்மாநில அரசு இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி ஒருவர் ஆன்லைனில் ஆபாசம் சார்ந்த தகவல்களை தேடினாலே அந்த நபரின் விவரங்கள் காவல்துறைக்கு சென்றுவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவரின் அந்தரங்கம் குறித்த தகவல் முக்கியம் என்பதால் ஆரம்பகட்ட நடவடிக்கையாக ஆபாச தளம் சார்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆபாச தகவல் குறித்து தேடும் நபரின் விவரங்கள் நேரடியாக காவல்துறைக்கு சென்றுவிடும். உடனடியாக 1090 என்ற எண்ணில் இருந்து எச்சரிக்கையும் விழிப்புணர்வு எஸ்எம்எஸ்-ம் வரும் என கூறப்படுகிறது.

தவறு வெளியில் தெரியாது என்பதனால் தான் பலர் இணைய குற்றங்களில் ஈடுபடுகின்றனர் எனவும் டிஜிட்டல் சக்ரவாயு என்ற திட்டத்தின் மூலமாக பெண்களுக்கு டிஜிட்டல்ரோட் மேப் உத்தரபிரதேச காவல்துறை மற்றும் அரசு உருவாக்கியுள்ளது. மாநிலம் முழுவதும் இந்த நடவடிக்கை தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1984 ஆம் ஆண்டு அமெரிக்க காங்கிரஸால் நிறுவப்பட்ட அமைப்பான என்.சி.எம்.இ.சி குழந்தைகள் தொடர்பான பிரச்னைகள், குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்கள், குழந்தைகள் துன்புறுத்துப்படுவதில் இருந்து தடுப்பதற்காக தொடங்கப்பட்ட லாப நோக்கமற்ற அமைப்பாகும்.

2019 ஆம் ஆண்டு இந்திய அரசு என்.சி.எம்.இ.சி அமைப்புடம் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டது. அதன்படி ஐந்து மாதங்களில் 25,000 குழந்தைகள் ஆபாசப்படம் இந்தியாவில் இருந்து பல்வேறு இணையதளங்களில் பதிவேற்றம் செய்து உலாவருவதாக தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிராவின் மும்பை, தானே, புனே போன்ற பகுதிகளில் தான் இதுபோன்ற புகார்கள் அதிகமாக வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் மகாராஷ்டிராவில் operation Black face என்ற தலைப்பில் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக