
ரியல்மி நிறுவனம் ரியல்மி ஜி டி 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ரியல்மி ஜி டி 5ஜி என்று அழைக்கப்படும் ஸ்மார்ட்போன் ரியல்மி ரேஸ் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. ஆனால், இந்திய சந்தையில் இந்த ஸ்மார்ட்போன் ரியல்மி ஜி டி 5ஜி என்ற பெயரில் தான் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ரியல்மி நிறுவனத்தின் விபி சூ குய் சேஸ் வெய்போ பக்கத்தில் ரியல்மி ஜிடி 5 ஜி ஸ்மார்ட்போனின் அறிமுக தேதியை அறிவித்துள்ளார். இந்த ஸ்மார்ட்போன் மார்ச் 4ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு (11.30 மணி IST) அறிமுகப்படுத்தப்படும். இந்த ஸ்மார்ட்போன் சமீபத்திய ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் மூலம் இயக்கப்படும் என்பதை போஸ்டர் தகவல் உறுதிப்படுத்தியுள்ளது. இது ரியல்மி ஜிடி 5 ஜி ஸ்மார்ட்போன் பற்றிய வேறு எந்த தகவலையும் வெளியிடவில்லை.
ரியல்மி ரேஸ் இந்தியாவில் ரியல்மே ஜிடி 5ஜி ஸ்மார்ட்போனாக அறிமுகமாகும் என்று சமீபத்திய அறிக்கை ஒன்று கூறியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மாடல் எண் RMX2202 உடன் BIS சான்றிதழைப் பெற்றுள்ளதால் இந்த போன் இந்தியாவிலும் அறிமுகமாகும் என்பது உறுதியாகியுள்ளது. இந்த ரியல்மி ஸ்மார்ட்போன் முன் பேனலின் மேல் இடது மூலையில் முன் கேமராவுடன் பஞ்ச்-ஹோல் டிஸ்பிளேவை கொண்டிருக்கும்.
இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனத்தின் பின்புறத்தில் செவ்வக வடிவ கேமரா அமைப்புடன் 64 எம்பி பிரைமரி கேமராவை கொண்டிருக்கும். டிப்ஸ்டர் வெளியிட்ட தகவல்படி, ரியல்மி ஜிடி கிளாஸ் மற்றும் லெதர் எடிஷனில் வெளியாகும். ரியல்மி ஜிடி, 120 ஹெர்ட்ஸ் வரை புதுப்பிப்பு வீத ஆதரவுடன் ஓஎல்இடி பேனலைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 12 ஜிபி ரேம், 256 ஜிபி உள் சேமிப்பு பொருத்தப்பட்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
ரியல்மி ஜிடி 5 ஜி ஸ்மார்ட்போன் 125W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் மிகப்பெரிய 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் வருவதாக வதந்தி பரவியுள்ளது. ரியல்மி 125W அல்ட்ராடார்ட் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் 4,000 எம்ஏஎச் பேட்டரியை மூன்று நிமிடங்களில் 33% வரை, 20 நிமிடங்களில் 100% சார்ஜ் செய்யும் என்று கூறப்பட்டுள்ளது. ரியல்மி யுஐ 2.0 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் உடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மொபைல்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக