
சியோமி நிறுவனம் கடந்த ஆண்டு இந்தியாவில் Mi 10T சீரிஸ் 5 ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் சீரிஸ் அறிமுகம் செய்யப்பட்டபோது, இது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்துடன் MIUI 12 உடன் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது நிறுவனம் ஆண்ட்ராய்டு 11 அப்டேட்டை இந்தியாவில் சியோமி Mi 10T மற்றும் Mi 10T ப்ரோ ஸ்மார்ட்போன்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
சியோமி தற்பொழுது வெளியிட்டுள்ள இந்த புதிய ஆண்ட்ராய்டு 11 அப்டேட் V12.1.1.0.RJDINXM என்ற எண்ணுடன் வருகிறது. இந்த புதிய ஆண்ட்ராய்டு 11 அப்டேட் 2.8GB அளவு கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்ட்ராய்டு 11 குடீஸுடன், ஜனவரி 2021 பாதுகாப்பு அப்டேட் இணைப்பையும் இந்த புதிய அப்டேட் இரண்டு சாதனங்களுக்கும் வழங்குகிறது என்று சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த அப்டேட் தற்போது நிலையான பீட்டா சோதனை கட்டத்தில் உள்ளது, ஆகையால் இது நாட்டில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட குறிப்பிட்ட சில பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. முழுமையான அசல் அண்ட்ராய்டு 11 அப்டேட் வெளிவருவதற்கு இன்னும் சில நாட்கள் மட்டும் எஞ்சியுள்ள Mi 10T சீரிஸ் பயனர்கள் காத்திருக்க வேண்டும். இந்த புதிய ஆண்ட்ராய்டு 11 அப்டேட்டில் என்ன-என்ன அம்சங்கள் கிடைக்கும் என்பதை இப்போது பார்க்கலாம்.
புதிய அப்டேட் நோட்டிபிகேஷன் ஹிஸ்டரி, பிரியரிட்டி சாட் செயல்பாடு, சாட் பபிள்ஸ், மேம்படுத்தப்பட்ட மீடியா கட்டுப்பாடுகள் மற்றும் ஒன்-டைம்-பெர்மிஷன் (one-time-permission) மேம்பாடுகள் போன்ற Android 11 அம்சங்களைக் இந்த அப்டேட் கொண்டுவந்துள்ளது. நினைவு கூற, சியோமி Mi 10T மற்றும் Mi 10T ப்ரோ 6.67' இன்ச் 2340 × 1080 பிக்சல்கள் கொண்ட முழு எச்டி பிளஸ் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.
இது ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 சிப்செட் உடன் 8 ஜிபி வரை எல்பிடிடிஆர் 5 ரேம் கொண்டுள்ளது. இது 33W பாஸ்ட் சார்ஜிங் உடன் 5000 எம்ஏஎச் பேபேட்டரியை கொண்டுள்ளது. இதில் 64 எம்.பி பிரைமரி லென்ஸ், 13 எம்பி அல்ட்ரா-வைட் சென்சார் மற்றும் 5 எம்பி மேக்ரோ லென்ஸ் ஆகியவற்றுடன் 20 எம்பி செல்பி கேமராவை கொண்டுள்ளது. Mi 10T ப்ரோ 108 எம்.பி பிரைமரி லென்ஸுடன் வருகிறது.
மொபைல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக