சாம்சங் நிறுவனம் அடுத்தபடியாக சாம்சங் கேலக்ஸி எஃப் 62 (Samsung Galaxy F62) என்ற புதிய ஸ்மார்ட்போன் மாடலை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யத் தயாராகிவிட்டது. இந்த புதிய ஸ்மார்ட்போன் பற்றிய சில தகவல்கள் அண்மையில் இணையத்தில் வெளியாகி வருகிறது. இப்போது, இந்த Samsung Galaxy F62 போனின் முக்கிய சிறப்பம்சம் மற்றும் விலை பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது. அதைப்பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
என்ன விலையில் எதிர்பார்க்கலாம்?
Samsung Galaxy F62 பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதுவும், இந்த புதிய ஸ்மார்ட்போன் இந்திய மதிப்பின் படி இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரூ. 25,000 என்ற விலைக்குள் அறிமுகம் செய்யப்படும் என்று டிப்ஸ்டர் தகவல் தெரிவிக்கிறது. அதேபோல், சமீபத்தில் இணையத்தில் வெளியான Samsung Galaxy M62 என்ற மாடலும் இதுவும் ஒன்று தான் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனுக்கு நிகரான சிப்செட்
வெவ்வேறு நாட்டின் ஸ்மார்ட்போன் சந்தைக்கு ஏற்றார் போல் இதன் மாடல் பெயர் மட்டும் மாற்றப்பட்டுள்ளது என்று டிப்ஸ்டர் முகுல் சர்மா குறிப்பிட்டுள்ளார். இந்த புதிய ஸ்மார்ட்போன் #FullOnSpeedy என்ற ஹேஷ்டேக் உடன் வெளிவரும் என்றும், இதில் எக்சினோஸ் 9825 சிப்செட் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிப்செட் ஸ்னாப்டிராகன் 765G சிப்செட் போன்ற பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அனுபவத்தை வழங்கும்.
Samsung Galaxy F62 முக்கிய சிறப்பம்சங்கள்
இதன் முதல் முக்கிய சிறப்பம்சமே Samsung Galaxy F62 ஸ்மார்ட்போன் 7000 எம்ஏஎச் என்ற மிகப் பெரிய பேட்டரியை கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல், இது 6.7' இன்ச் கொண்ட அமோலேட் டிஸ்பிளேயுடன் எக்சினோஸ் 9825 சிப்செட் உடன் வெளிவரும். இந்த ஸ்மார்ட்போன் ப்ளூ மற்றும் க்ரீன் வண்ண விருப்பங்களில் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
ஸ்டோரேஜ் மற்றும் கேமரா விபரம்
எக்சினோஸ் 9825 பிராசஸர் 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்படும் என்றும், கூடுதல் ஸ்டோரேஜ் வசதிக்காக மைக்ரோ எஸ்.டி கொடுக்கப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. கேமரா பற்றி பார்க்கையில் இந்த ஸ்மார்ட்போன் 64 மெகா பிக்சல் பிரைமரி கேமராவுடன் மூன்று விபரம் குறிப்பிடப்படாத மற்ற சென்சாருடன் வெளிவரும். முன்பக்கத்தில் 32 மெகா பிக்சல் செல்பி கேமரா கொடுக்கப்படும். இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்துடன் வெளிவரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக