சியோமி நிறுவனம் இன்று மி போர்ட்டபிள் புளூடூத் ஸ்பீக்கர் (16 டபிள்யூ) மற்றும் மி நெக்பேண்ட் புளூடூத் இயர்போன்ஸ் புரோ ஆகிய இரண்டு ஆடியோ சாதனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் மி இந்தியா இன்று தங்கள் சமீபத்திய ஆடியோ தயாரிப்பு புதிய சாதனங்களைச் சேர்த்துள்ளது.
மி போர்ட்டபிள் புளூடூத் ஸ்பீக்கர் (16 டபிள்யூ) கருப்பு மற்றும் நீல வண்ண வகைகளில் வெறும் ரூ .2,499 என்ற விலையில் மி Mi.com மற்றும் மி ஹோம் ஆகியவற்றில் பிரத்தியேகமாக வாங்கக் கிடைக்கிறது. அதேபோல், மி நெக்பேண்ட் புளூடூத் இய்ரபோன்ஸ் ப்ரோ ரூ .1,799 விலையில் கிடைக்கிறது. இந்த இரண்டு மாடல்களும் பிப்ரவரி 22ம் தேதி முதல் மி.காம், மி ஹோம்ஸ், வழியாகக் கிடைக்கிறது. அமேசானில் மார்ச் 1 ஆம் தேதி முதல் கிடைக்கும்.
மி நெக்பேண்ட் புளூடூத் இய்ரபோன்ஸ் ப்ரோ டபுள் நாய்ஸ் கான்சலேஷன் உடன் சிறிய வடிவமைப்பு மற்றும் சிறந்த- இன்-கிளாஸ் அம்சங்களுடன் உயர்தர ஒலி அனுபவம் மற்றும் டீப் பாஸ் அனுபவம், தெளிவான வாய்ஸ் கால் அனுபவத்தையும் வழங்குகிறது. இந்த சாதனம் ஆன்டி-ப்ளாகிங் மற்றும் ஆன்டி-சேருமென் தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் வலி இல்லாத தூய்மையான இய்ரபோன்ஸ் அனுபவத்தைப் பயனர்கள் அனுபவிக்க முடியும்.
இதில் ANC எனப்படும் ஒன் கிளிக் நாய்ஸ் கான்சலேஷன் உள்ளது, இதனால் சுற்றுப்புறத்தில் உள்ள தேவையில்லாத சத்தங்கள் 90% குறைக்கப்படுகிறது. இதில் உள்ள மைக்ரோபோன் மிக துல்லியமான குரல் அனுபவத்தையும் வழங்குகிறது. மி நெக்பேண்ட் புளூடூத் இய்ரபோன்ஸ் ப்ரோ 10mm டைனமிக் டிரைவர் உடன் 125ms லோ-லாடென்சி ஆடியோ அம்சத்துடன் வருகிறது. இந்த சாதனம் 20 மணிநேரம் நீடிக்கும் பேட்டரி உடன் வருகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக