வாட்ஸ்அப்பின் மிகவும் விரும்பப்படாத தனியுரிமைக் கொள்கை புதுப்பிப்பு மே 15, 2021 அன்று செயல்படுத்தப்படும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. மே 15 காலக்கெடுவிற்குள் அதன் விதிமுறைகளைப் புறக்கணித்தால் ஒரு பயனர் எதிர்கொள்ளக்கூடிய மாற்றங்களின் விவரங்களைப் பற்றி வாட்ஸ்அப் நிறுவனம் தற்பொழுது விவரித்துள்ளது.
புதிய தனியுரிமை மாற்றங்களை ஏற்றுக்கொள்ளாத போது என்ன நடக்கும்?
டெக் க்ரஞ்சின் புதிய அறிக்கையின்படி, புதிய தனியுரிமை மாற்றங்களை ஏற்றுக்கொள்ளாத பயனர்களுக்கு என்ன நடக்கும் என்பது பற்றிய விரிவான தகவல்களை வாட்ஸ்அப் ஒரு மெயில் மூலம் வழங்கியுள்ளது. இது புதிய விதிமுறைகளுக்குப் பயனர் இணங்கும் வரை, வாட்ஸ்அப் சேவையின் ஒவ்வொரு சேவையையும் மெதுவாக்க நிராகரிக்கப்படும். மே 15 வரை வாட்ஸ்அப்பின் முழு செயல்பாட்டைப் பயனர்கள் யாரும் இழக்க மாட்டார்கள்.
கணக்கிற்கான அணுகலை இழக்க மாட்டீர்கள்.. ஆனால்..
முன்னதாக, பயனர்கள் புதிய தனியுரிமைக் கொள்கையை ஏற்க வேண்டும், இல்லையெனில், தங்கள் கணக்கிற்கான அணுகலை இழக்க வேண்டும் என்று வாட்ஸ்அப் கூறியிருந்தது. இப்போது, வாட்ஸ்அப் பயன்பாட்டிலிருந்து இந்த புதிய புதுப்பிப்பு உங்கள் கணக்கை நீக்காது என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும், நீங்கள் விதிமுறைகளை ஏற்றுக்கொள்ளும் வரை வாட்ஸ்அப்பின் முழு செயல்பாட்டை நீங்கள் அனுபவிக்க முடியாது.
குறுகிய கால சேவை மட்டுமே கிடைக்கும்
"குறுகிய காலத்திற்கு, நீங்கள் அழைப்புகள் மற்றும் நோட்டிபிகேஷன்களை பெற முடியும், ஆனால் பயன்பாட்டிலிருந்து மெசேஜ்களை படிக்கவோ அல்லது அனுப்பவோ உங்களால் முடியாது". இப்போது, புதிய தனியுரிமைக் கொள்கையை நீங்கள் ஏற்க வேண்டுமா அல்லது உங்கள் சாட் வரலாற்றைப் பதிவிறக்கி மற்றொரு மெசேஜ்ஜிங் பயன்பாட்டிற்குச் செல்ல வேண்டுமா என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
120 நாட்களுக்குப் பிறகு தானாகவே கணக்கு நீக்கப்படுமா?
மே 15ம் தேதிக்குப் பிறகும் புதிய கொள்கையை நீங்கள் ஏற்றுக் கொள்ளலாம் என்று வாட்ஸ்அப் கூறுகிறது, ஆனால் காலக்கெடு முடிந்ததும், நீங்கள் இன்னும் 'Accept' பொத்தானை அழுத்தவில்லை என்றால், வாட்ஸ்அப் உங்கள் கணக்கை 'செயலற்றது' என்று குறிக்கும், மேலும் செயலற்ற கணக்குகள் 120 நாட்களுக்குப் பிறகு தானாகவே நீக்கப்படும் என்றும் வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.
உங்கள் கணக்கு செயலற்ற கணக்காக மாற்றப்படும்
இதற்குப் பின்னர் ஒரு பயனர் தங்கள் சாதனத்தில் வாட்ஸ்அப் திறந்திருக்கும் போது, இந்த கணக்கு செயலற்ற கணக்கு என வகைப்படுத்தப்படுகிறது, ஆனால் அவர்களுக்கு இணைய இணைப்பு இல்லை என்று கூறி, பின்னர் கணக்கு செயலற்றதாக மாற்றப்படும்.
புதிய விதிகளை நீங்கள் ஏற்கவில்லை என்றால் இது தான் நடக்கும்
இதன் பொருள், மே 15 தேதிக்குப் பிறகு ஒவ்வொரு நாளும், காண்பிக்கப்படும் நோட்டிபிகேஷன் உடன் புதிய விதிகளை நீங்கள் ஏற்கவில்லை என்றால் நீங்கள் வரையறுக்கப்பட்ட செயல்பாட்டுடன் பணியாற்ற வேண்டியிருக்கும். விருப்பம் இல்லாதவர்கள் இதற்கு பின்னர் வேறு சில மெசேஜ்ஜிங் ஆப்ஸை பயன்படுத்தலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக